இது தான் இலங்கையின் பின் தங்கிய கிராமங்களின் மறுக்கப்பட்ட கல்வி…

24 08 2009

“நான் தரம் 08 ஆம் வகுப்புடன் பாடசாலையை விட்டு இடை விலகினேன் 02 வருடங்கள் எனது தாயாருக்கு உதவியாக வீட்டில் இருந்து எனது சகோதரர்களை கவனித்து வந்தேன் பின்னர் எனது தயாரின் உறவினர் மகனை பெறோரின் வேண்டு கோளுக்கிணங்க திருமணம் செய்தேன் தற்போது எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது எனது கணவரும் தனது தந்தையாருடன் சேர்ந்து மீன் பிடித் தொழிலையே மேற்கொள்கின்றார்;. எனக்கு ஒரு குறையும் இல்லை சந்தோஷமாகத் தான் வாழ்கிறேன”சற்று சோகம் கலந்த புன்னகையுடன் கூறுகிறார் தேவதர்ஷினி. தனது வாழ்க்கையின் இளமைப் பருவத்தினை தொலைத்துவிட்டு ஏக்கத்துடன் வாழ்கை நடத்தும் தேவவர்ஷினியைப் போன்று சேர்ந்த இன்னும் எத்தனையே சிறுவர்கள் இவற்றுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதில் இது வரை எவரும் முன்வர வில்லை என்பது தான் சிந்திக்க வேண்டிய விடயமாகும். வெறுமனே பணமும் திருமணமும் என வாழ்க்கை நடத்தும் சிலாபம் மீன்பிடிக் கரையோர வாசிகளது எதிர்கால நிலைமை தான் என்ன? இதேவேளை நாட்டின் உள்ளுர் நிறுவனங்கள் மாத்திமன்றி வெளிநாட்டு நிறுவனங்களும் மேற்படி கரையோர பகுதிகளுக்கு செல்வதென்பதும் மிகக் குறைவாகவே உள்ளது பல்வேறு துறைகளிலும் நாடு வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில் இன்னமும் எமது நாட்டின் மூலை முடுக்குகளிn;லல்லாம் மேற்படி அசாதாரண நிகழ்வுகள் இடம் பெற்று வருவதென்பது நாட்டின் நடைமுறையிலுல்ல சட்ட முறைமையை எடுத்துக்காட்டுகிறது ஏனெனில் நாடு வளர்ச்சி கண்டுள்ளது என தம்பட்டம் போடும் அரசானது இன்னமும் மேற்படி விடயங்களை கவனத்தில் கொள்ள வில்லை என்பது அரசினையே கேலிக்கூத்தாக்கும் விடயமாகவே உள்ளது. ஆமாம் தத்தம் வீடுகளிலேயே கைக்கூலிகளாகக் வைத்திருக்கும் பெரும்பாலான பெற்றோர் அதற்கான காரணத்தையும் நியாயப்படுத்துவதற்கு முற்படுவது தான் வேதனையும் வெட்கமுமான விடயமாக உள்ளது. தமது பெற்றோரின் எண்ணமும் தமது எதிர்காலம் பற்றியும் சிந்திக்கத் தெரியாத இளமைப் பருவம் அதனைத் தமது சுகபோக வாழக்கைக்கு வீணான முறையில் பெற்றோர்களே பிரயோகிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத சீர்கேடான விடயமாக உள்ளது.தரம் 01 இல் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பாடசாலைக்கு அனுப்பும் பெரும்பாலான பெற்றோர்கள் ஏனோ தரம் 08அல்லது09 வகுப்புக்களில் இடை நிறுத்தம் செய்கின்றார்களோ இதனால் தமது பாடநெறியை பூர்த்தி செய்ய முடியாத விரக்தி நிலைக்கு பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் தள்ளப்பட்டுள்ள கொடுர சம்பவங்கள் இன்னும் எமது நாட்டில் ஆங்கர்கு மூலை முடுக்குகளிலெல்லாம் தலை விரித்தாடுகின்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை! ஒரு வருடத்தில் ஆகக் குறைந்தது தரம் 08 ஆம் வகுப்பில் மாத்திரம் 05 தொடக்கம் 10 வரையான மாணவர்கள் இடை விலக்கப்படுகின்றனர்.இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நாமும் பல முறை பாடசாலை கூட்டங்களில் பெற்றோர்களுக்கான அற்வுறுத்தல்களும் அறிக்கைகளும் விடுப்பது. எனினும் அவற்றை பெரும்பாலான பெற்றோர்களும் அதனை கவனத்தில் கொள்வதில்லை எனவும் சென்.பெனடிக் பாடசாலை அதிபர் பெனடிக் அன்ரனி ரொஜர் மிராண்டர் உட்பட பல அசிரியர்ளும் கருத்தாக உள்ளது. இதிலும் பல மாணவர்களானது கல்வி நடவடிக்கையானது தரம் 08 இலேயே நிர்ப்பந்தத்தின் பேரில் கேள்விக்குறியாகிறது. எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறன கொடுமையான சமுக வழக்காறுகளுக்குள் தள்ளப்பட்டுள்ள பெற்றோர்களதும் மாணவர்களதும் எதிர் காலம் தான் என்ன? தத்தம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தெரியாத பெற்றோர்களுக்கான எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் எம்மால் எடுக்க முடியாது.ஏனெனில் இவ்வாறான பாடசாலை இடைவிலகலானது காலம் காலமாக எமது மீன்பிடிக் கரையோரங்களில் இடம் பெற்று வருவது வழமை அவ்வாறு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முயன்றால் கிராமவாசிகள் தம்மை திவிரமான முறையில் தாக்க முன்வருவதாகவும் சென் பெனடிக் பாடசாலை பலைய மாணவியும் பாடசாலை நலன் விரும்பியுமான ஜெயா கூறுகின்றார். இதேவேளை பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட கால இடை வெளியினுள்ளே இள வயதுத் திருமணம் போன்ற இல்லற வாழ்க்கைக்குள் கட்டாயத்தின் பேரில் தள்ளப்படுகின்றனர். எம்மால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வயதிற்கான பிறப்பத்தாபட்சிப் பத்திரத்தினையே போவியான முறையில் வயதினை அதிகரித்து மாற்றம் செய்வதாகவும் சிலாபம் உடப்பு கிராம சேவகர் வேலன் சம்மாத்தி தெரிவித்தார்.காலம் காலமாக மீனவ சமுகத்தில் இடம் பெற்று வரும் வழக்காறுகள் எனவும் கூறினார். எனவே இதில் எமது சட்டரீதியான நடவடிக்கைகளோ அல்லது பாடசாலை நிர்வாகத்தினரோ கவனம் எடுப்பது குறைவு எனவும் அவர் மேலும் கூறினார் இருப்பினும் சில பெற்றோர்கள் முழுமையாக தமது பிள்ளைகளை பாடசாலையை விட்டு இடை விலக்குவதில்லை என்பதுடன் சிறிது கால இடை வெளியின் அடிப்படையில் பாடசாலை செல்கின்றனர் இவற்றுக்கான அனுமதியினை பிள்ளைகளின் நலன் கருதி பாடசாலை நிர்வாகம் அனுமதி வழங்குகின்றன எனவும் அவர் கூறினார். இதேவேளை பெரும்பாலான பிள்ளைகள் இளவயதுத் திருமணம் என்கிற போர்வைக்குள் தாமாகவே அகப்பட்டுக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனா.; என்பதுடன் இதுவும் பாடசாலை இடை விலகளின் பின்னரான குறிப்பிட்ட கால இடைவெளியில் தமது அறியாமை காரணமாகவே இவ்வாறான செயற்பாடுகளில் பிள்ளைகள் தங்களை இனைத்துக் கொள்கின்றனர் என்பதும் வேதனைக்குரிய விடயமாகத் தென்படுகிறது. இவற்றை விடவும் பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் தமது பிறப்பத்தாட்சிப் பத்திரத்தினையும் மாற்றி பாடசாலையினை விட்டு இடை விலகி தூர இடங்களுக்கு ஆடைத்தொழிற்சாலைகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்வதும் குறிப்பிடத்தக்கது. வெளி இடங்களுக்கு வேலைக்குச் செல்லும் பிள்ளைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பிள்ளைகள் அவர்களது உரிமை மீறல்கள் சம்பந்தமாகவே கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரும் நாமும் நம்மைச் சார்ந்த அமைப்புக்களும் ஏனோ மேற்படி விடயங்களை கவனத்தில் கொள்வதில்லை? நாட்டின் நகர்ப்புறங்களில் மட்டும் இடம் பெறும் சிறுவர் அநியாயங்கள் தான் சிறுவர் உரிமை மீறல்களாகக் கணிக்கப்படுவதென்பது எந்தளவு நியாயபூர்வமானது என்பது கேள்விக்குறியே!பல கிராமப் புறங்களில் வழக்காறுகளாகப் பின்னிப்பினைந்துள்ள சில கடப்பாடுகளும் கட்டுப்பாடுகளும் சிறுவர் உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்றது என்பதும் இன்னும் எமது நாட்டின் முறையற்ற சிறுவர் பாதுகாப்பு தற்கால நடைமுறையின் தர்க்க ரீதியான சிந்தனையாகவே உள்ளது.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: