இலங்கையும் டெங்கு நோயும்

25 08 2009

 சுகாதார பாதுகாப்பு, மற்றும் போஷாக்கு அமைச்சின் தேசிய டெங்கு ஒருங்கிணைப்புப் பிரிவினால் ஏப்ரல் 27 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 2 ஆம்திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த நுளம்பு விருத்தி செய்யப்படும் இடங்களை அழித்து அப்புறப்படுத்துவது சம்பந்தமாக பொதுமக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பாடசாலை சிறுவர்களுக்கும் அறிவுறுத்துவதற்காக செயற்திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது; இச்செயற்திட்டத்தின்போது சுவரொட்டிகள், விளக்கச்சித்திரங்கள், துண்டுப்பிரசுரங்கள் போன்றவற்றை ஒட்டுவதற்கும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்களில் விநியோகிப்பதுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதான இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இச்செயற்திட்டங்களை ஒரு வாரத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் வருடம்பூராவும் மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை விடவும் சுகாதார அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் கடந்த வருடத்தை விடவும் இவ் வருடம் 24,000 டெங்கு நோயாளா்கள் அதிகரித்துள்ளதாகவும்.கிழமைக்கு 700 டெங்கு நோயாளா்கள் எனவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நோயினால் நாட்டின் பல பாகங்கள் பாதிக்கப்பட்டதுடன் காலநிலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களினால் ஏற்படும் மழைவீழ்ச்சி, உஷ்ணம் போன்றவற்றில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக நுளம்புகளின் இனப் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீட்டின்படி உலக சனத்தொகையின் 50 வீதமானவர்களும் ஆசியாவின் சனத்தொகையில் 72 வீதமானவர்களும் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகில் வருடாந்தம் 50 தொடக்கம் 100 மில்லியன் வரையான மக்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 இலட்சம் மக்கள் இந்நோயின் கடுமையான தாக்கத்துக்கு ஆளாவதாகவும் சுகாதார பாதுகாப்பு மற்றும் போஷாக்கு அமைச்சின் பிரதிப் பணிப்பாளர்நாயகம் வைத்தியர் பீ.ஜீ. மஹிபால சுகாதார கல்வி பணிப்பகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இலங்கையில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை டெங்கு நோயினால் 3,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 40 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் சமூகநல வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசித திசேரா இங்கு சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகளினால் இந்நோயினால் இறப்பவர்கள் மிகக் குறைவான நாடாக இலங்கை எனக் கருதப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 588 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா, கண்டி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களிலும் பார்க்க அதிகமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கு சுகாதார பாதுகாப்பு மற்றும் போஷாக்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மக்களை அறிவுறுத்துவதுடன் நின்றுவிடாமல் சட்டரீதியாக நுளம்பு தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டார். தற்போது நிலவுகின்ற காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகளுடன் டெங்கு நோயினது தாக்கமும் நுளம்பின் இனப்பெருக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றதுடன் முன்னொருபோதும் இவற்றின் தாக்கத்துக்கு உட்படாத நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் இங்கு தெளிவு படுத்தினார். உலக நாடுகளில் மிகக் குறைந்தளவிலேயே எமது நாட்டில் டெங்கு அபாயம் இருப்பதாக தெரிவித்திருப்பது சிறந்தது என்றாலும் இதற்காக அரசு செலவிடும் பணத்தின் தொகை வேதனையான விடயம் என்பது மறுக்க முடியாத உண்மை.தினம் தினம் பெறும் கடனுதவி மற்றும் அந்நியச் செலாவனி மிகப் பரந்துபட்ட அளவில் சுகாதாரத்துறைக்கென செலவு செய்யப்படுவது வேதனைக்குரிய விடயம் அல்லவா?ஒவ்வொரு பொது மகனும் சிந்திக்க வேண்டிய விடயம் எனினும் அரசுதனியே சிந்திப்பதுதான் வேதனை.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: