ஈழத்தமிழரின் ஆயுதக் கலாசாரத்திற்க்கு வித்திட்ட காந்திய தேசம்

16 10 2009

ltte1இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்லு தாழ்வு பற்றிய விடயங்களும் இலங்கை இந்தியாவுடனான மூன்று முக்கிய ஒப்பந்தங்களும் சிறிமா-நாஸ்திரி முதலாவது  ஒப்பந்தம்.நாடற்றவராக கருதப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை இலங்கையிலும் இந்தியாவிலும் பிரஜைகளாக்கிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஏன்றாலும் இந்தச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களைப் பொறுத்த வரை இந்திய வம்சாவளித் தமிழர்களின் வருங்கால வதிவிட உரிமை, அரசியல், பொருளாதார உரிமை, சமூகவியல்,அவர்களின் கலை கலாசார பண்பாட்டு உரிமைகளை இந்திய அரசு எந்தளவு கவனத்தில் கொண்டது என்பது வேதனைக்குரிய விடயமாகவே உள்ளதுஇ

மலையகத் தமிழர் வதிவிடம் கூட ஒரு கேள்விக்குறியாகவே மாறவும் சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்படவும் பொது நன்மைக்கென இவர்களது காணிகளை அரசு சுபீகரித்துக் கொள்வதும்  எதுவும் காலா காலமாக இடம் பெற்று வருகின்ற உண்மை என்றாலும் இதற்கான எந்த விதப் பரிகாரமும் ஒப்பந்தத்திலோ அல்லது ஒப்பந்தப் பிரகாரமோ கொண்டுவரப்படவில்லை என்பது மறக்க முடியாத உண்மை.

இந்திரா காந்தி அம்மையாரும் சிறிமாவோ அம்மையாரும் தமது சுயலாபம் கருதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எனக் கூறக்கூடிய கச்சதீவு ஒப்பந்தமே இரண்டாவதாகும்.. இதுவும் 1974 இல் கையெழுத்திடப்பட்டது.

காலா காலமாக தமிழ் நாட்டு மீனவர்கள் அனுபவித்து வந்த இவர்கள் கச்ச தீவில் தங்கள் வலையை காயப் போடும் உரிமையைத் தவிர வேறு எதையும் பெறவில்லை. எனினும் குமரிமுனைப்  பகுதியில் மாத்திரம் இலங்கை மீனவர்களுக்கான முழு உரிமையும் வழங்கப்பட்டது எனலாம்.

அதுவும் ஒப்பந்த காலத்திலிருந்து 10 வருட காலத்திற்க்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. கருணாநிதியும் டில்லியும் தான் இதற்க்டகுப் பொறுபட்பு என்பதும் உண்மை.

சுதந்திரமடைந்த காலத்திலுருந்து காந்திய வழியில் அதிகாரப்பகிர்வு கோரிய ஈழத்தமிழர் வாழ்வில் முதன்முறையாக காந்திய தேசம் தனது ஆயுதக் கலாசாரம் இலங்கையிலும் புகுவதற்க்கு வித்திட்டது.

1957 பண்டா- செல்வா  ஒப்பந்தம் தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1965 டட்லி-செல்வநாயகம் கையெழுத்திட் ஒப்பந்தத்pலே இலங்கை அரசு தமிழர்களுக்கென பிரத்தியேக பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாகவும் எல்லா பிரச்சினைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்ற அடிப்படையிலே முழு இலங்கைக்குமான மாவட்ட சபை ஸ்தாபிக்கப்பட்டது.

1977 இல் மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பகிர்வு என்பது முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது.1981இல் மாவட்ட அபிவிருத்தி சபை ஊருவாக்கப்பட்டது. இதன் பயனாக அமைதி வழிப் போராட்டம் ஆயுத வழிப் போராட்டமாக மாறியது.

காந்திய தேசம் தனது வெளிநாட்டு அரசியல் அரசியல் நலனுக்காகவே தமிழ்மக்கள் மத்தியில் ஆயுதக் கலாசாரத்தை வளர்ப்பதற்க்கு காரணமாக அமைந்தது என்பதும் உன்மை. ஆன்று விடுதலைப் போராளிகளென அனங்காட்டியும் வளர்த்தும் விட்டதுமான இந்தியா இன்று அதே இயக்கத்தை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி அவர்களை புடைத்தெறிய இலங்கையுடன் கை கோர்த்து செயற்பட்டமையும் தனது வெளிநாட்டு அரசியல் நலனுக்காகவே.

1987இல் ஜே.ஆர்.-ராஜிவ் ஆகியோருக்கிடையிலான மூன்றாவது ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலன்களை காப்பதற்காக தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்களை உறுதிப்படுத்துவதற்குமாகவே மேற்கொள்வதாக இந்திய அரசு கூறியது.

அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதுடன் அதற்கான சட்டவலுகை இந்தியா பரிசீலிக்காமலும் விட்டது. இந்த ஒப்பந்தத்தின் பயனாக வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப் பெருமான்  முதலமைச்சர் பதவியை துர்க்கி எறிந்து விட்டு இன்று வரை இந்தியாவின் கௌரவ அகதிப்பிள்ளையாக தஞ்சமடைந்துள்ளதும் வரலாறாகவே உள்ளது. தமிழ் மக்கள் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா ஒப்பந்த நடைமுறை குறித்து கவனத்தில் எடுப்பதில் சிரத்தை காட்டவில்லை.

மொத்தத்தில் தமிழ் மக்களை இந்தியா பேரின வாதத்தின் இரும்புக் கரங்களுக்குள் தள்ளி விட்டு தமிழ் மக்களின் மீட்சி குறித்தும் பேசுவது அர்த்தமற்றது. ஏன்பது தான் தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாகும்.

இன்றைய சூழ்நிலையில் தம்pழ் மக்கள் அரசியல் வல்லமையுள்ள அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆநாதைகளானக கைவிடப்பட்டுள்ளனர். ஆதற்கான காரணத்தை இந்தியா தான் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போது எவர் என்ன கொடுத்தாலும் அதை ஏற்று மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஈழத் தமிழர்கள் பலியாகி விட்டனர்! மோத்தத்தில் இந்தியாவின் சத்திய சோதனைக்கு இலங்கைத்தமிழினம் பலியாகி விட்டது.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: