முஸ்லிம்களின் தமிழ் மொழி

20 10 2009

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான தொகுப்புகள். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் பெரும்பாலானர்வர்கள் தமிழையே
தாய்மொழியாக்கொண்டுள்ளதோடு இவற்றில் பெரும்பாலனாவற்றைப் பாவிக்கின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்:-

இதில் சில வார்த்தைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு உரியவைகளாகும், அதாவது அப்படிப்பட்ட வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகளாகும். அவை பெரும்பாலும் அரபி மொழி உச்சரிப்பை கொண்டிருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
அல்லாஹ் – (ஒரிறைக்) கடவுள்,
முகம்மது (இலங்கைத் தமிழ்: முஹம்மது) – முகம்மது நபி, இறைத்தூதர், இஸ்லாமியர்கள் முகம்மது நபி அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக தங்கள் பெயருக்கு முன் “முகம்மது” என்று சேர்த்துக்கொள்வர். உதா. முகம்மது சலீம்.
யா-அல்லாஹ் – கடவுளே, பிரார்த்தனையின் போது, துயரத்தின்போது விளிக்கப்படும் வார்த்தை.
பிஸ்மில்லாஹ் – கடவுளின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்), இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு செயலை செய்யும் பொழுது சொல்லப்படும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய கடவுளின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்)
இன்ஷா அல்லாஹ் – கடவுள் நாடினால் (நடக்கும்)
அல்ஹம்துலில்லாஹ் – கடவுளுக்கு நன்றி.
ஜகாத் – ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான (அரசாங்க) வரி. அரசு வசூலிக்கவில்லையெனின் கடமையானோர் தாமாகவே இவ்வரி பெறத்தக்கவர்க்கு வழங்குதல் முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஷைத்தான் – தீய செயல்களுக்கு தூண்டுகிறவன்,

Advertisements

Actions

Information

One response

5 12 2009
இலங்கைத் தமிழ்ப் பதிவர்

அன்பின் பதிவர்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அமைப்புக் குழு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: