‘எல்லாப் புகழும் இறைவனுக்கே”

6 01 2010

 
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் நாட்டின்; சென்னையில் 6ஆம் திகதி திரு திருமதி சேகர் குடும்பத்திற்க்கு மகனாகப்பிறந்தார். இயற்பெயர் திலிப்குமார். இசைவழி சார்ந்த குடும்ப பிண்ணனியில் பிறந்தாலும் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்ததால் பெரும் சிரமத்துக்கு ஆளானார்.

இவரது தந்தையார் நேகர் மலையாலத் திரைப்படத் துறையில் பணியாற்றியவர். குடும்ப வறுமையின் மத்தியிலும் பியானோ, ஹர்மோனியம், கிற்றார் போன்ற பல இசைக்கருவிகளை தனது இசையுலகத்தின் ஆரம்பப் புள்ளியான தனராஜிடம் கற்றார்.

தனது 11ஆவது வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோட் வாசிக்கச் சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்திய நாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியற்றிய சிறந்த அனுபவத்தையும் பெற்றுள்ளார். டிரிட்டினி கல்லூரியில் கிளாசிக்கல் பட்டம் பெற்றார்.

1992 இல் தனது வீட்டிலேயே மியுசிக் ரெக்கோர்டிங் தியேட்டர் அமைத்தார். அதே ஆண்டு மணிரத்தினம் அவர்களால் கிடைக்கப்பெற்ற ரோஜா திரைப்படம் இவரது வாழ்வில் ஏற்படுத்திக் கொடுத்த திருப்புமுனையே முதல் தேசியவிருது வாங்கி தந்தது.

அதனைத் தொடர்ந்து, 1997 இல் மின்சாரக்கனவு, 2002இல் லகான், 2003இல் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல திரைப்படங்கள் வரிசையாக தேசிய விருதுகளை இவருக்கு பெற்றுத்தந்தது. இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸ்ருடியோவாக உள்ளது.
திரைப்பட, மேடை இசையின் முடிசூடா மன்னரான ரகுமானின் மனைவி பெயர் ஷெரினா பானு. இவர்களுக்கு காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

            

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது ,திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது, பாஃப்டா,ஆஸ்கார் விருதுகளையும் பெற்ற முதலாவது இந்தியராவார்.   

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கேயும்  உச்சரித்தமை மூலம் உலக வாழ் தமிழ் பேசும் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கனக்கான விருதுகளுக்குச் சொந்தக்காரரான இசையமைப்பாளர், பாடகர், இசை தயாரிப்பாளர்,இசை இயக்குனர்  போன்ற பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தமானவர் ஏ.ஆர். ரகுமான்.
 
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஏ.ஆர். ரகுமானின் “விண்ணைத் தாண்டி வருவாயா” என்ற இறுவட்டு கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வெளியானது.

2010 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தச் சாதனை நாயகன் இவ்வாண்டுக்குள் நிறைவேற வேண்டியவை என மூன்று எண்ணங்களைக் கொண்டுள்ளார்.

இந்த உலகில் முதன்மையான பாடகராக, இசையமைப்பாளராக மிளிர வேண்டும் என்பதும், ஏழு வயதாகும் தனது மகன் அமீன் இசையுலகில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதும், தனது வாழ்க்கையை மையமாக வைத்து நஸ்ரின் முன்னி காபீர் என்பவரால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் சரித நூலை வெளியிட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டுள்ளார்.
தனது வாழ்க்கையை இசைச் சரிதமாக மாற்றிக்கொண்டிருக்கும் ஏ.ஆர். ரகுமான் 

WISH YOUR HAPPY BIRTHDAY RAHMAN

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: