கலி யுகம் மறைய இன்னும் 380, அல்லது 4,30,000 ஆண்டுகள் உள்ளனவா?

21 01 2010

 

ஒவ்வொரு மதங்களிலும் எழுதி வைத்தாட் போல் நடைபெறுகிறது என்ற எம்மைப் போன்ற சாதாரண மக்களினது நம்பிக்கைகள், ஐதீகங்கள், எல்லாம் உண்மையா? இது வானவியலாளர்களால் உருவாக்கப்ட்டதா? அல்லது தேவர்களின் நம்பிக்கையா?

பைபில், அல் குர்ஆன், பகவத் கீதை, மகாவம்சம் ஆகிய ஒவ்வொரு வேதங்களும் தற்போது கலி யுகம் இடம் பெற்றுவருவதாக கூறுகிறது. அப்படியானால் அவற்றின் கூற்றுப்படி இன்னும் 380 ஆண்டுகள் மக்கள் கலியுகத்தின் காலடியில் வாழவேண்டுமா?
 
இவற்றிலும் ஒரு ஒற்றுமை கலியுகத்தில் என்னெல்லாம் நடக்கும் என்பதும், அதற்கு உட்பட்டு வாழ்பவர்கள் இறந்த பின்னர் எவ்வாறு தண்டிக்கப்படுவார்கள் என்பதுவும் அனைத்து வேதங்கள் உட்பட்ட எல்லா மனிதர்களினதும் ஒன்று பட்ட ஒரு குழுமக் கருத்தாகும்.

எனக்கு எனது மதத்தினைப்பற்றியே முழுமையாக தெரியாத என்றாலும் தெரிந்து கொண்ட என் புத்திக்கு எட்டின சில தகவல்கள் இவை!

கலியுகம் இந்து தொன்ம வியலில் புராணங்களில் உலக குமுகாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும். மற்றவை கிருத யுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதா யுகம், துவாபர யுகம்.

இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம் – 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள், திரேதாயுகம் – 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள், துவாபரயுகம் – 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். கலியுகம் 4 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகள். தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது.கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

கலியுகம் என்று ஆரம்பித்தது என உறுதியிட்டு கூற இயலவில்லை. கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக ஸ்ரீமத் மகாபாகவதம் முதல் கேந்தம் அத்தியாயம் 15, சுலோகம் 36 கூறுகிறது. கி.மு. 3102 பெப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியதாக கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார் குறிப்பிடுகிறார்.

கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார். ஸ்ரீயுக்தே~வர் என்பவர் இந்த 4,36,000 ஆண்டுகள் கணக்கையே தவறானதாக கூறுகிறார். அவரது கூற்றுப்படி கலியுகத்திற்கு 2400 ஆண்டுகள் (1200 ஆண்டுகள் இறங்குமுகம்,1200 ஆண்டுகள் ஏறுமுகம்);தவிர தற்போது நடப்பது துவாபர யுகம.

கலியுக இயல்புகள்

கலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:

அரசர்கள் செங்கோல் ஆட்சி தோற்று வீடும் கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர்.

மக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும் ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். கொலைகள் என்ற தொரு கொடூர நாடகம்  எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது. காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.

ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.

கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும். வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான “கலி”யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும்.

தனக்கு மட்டும் சாதி மதங்களை பகுத்து வைத்த மனிதன் கலியுங்களையும் விட்டுவைக்க வில்லை எனலாம். ஆதகால் தானோ என்னமோ கலியுகத்திற்கு கூட காலங்களை பகுத்து அதன் பேரில் வாழ்கிறான் போலும்

கிருதயுகம் 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்
அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்த யுகம்

திரேதாயுகம் 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்.
~ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம்.

துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.
பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம் அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.

கலியுகம் 4 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகள்.
அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவதாகும். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர்.

யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பெப்ரவரி 18, 3102 , ஆக இந்த 2008 ஆம் வருடம் கலியுகத்தில் 5104 ஆம் வருடம் ஆகின்றது.

கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,30,000 வருடம் இருக்கின்றது. கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

Advertisements

Actions

Information

One response

27 09 2010
mahendaran

why should they contradicted in determinig the period of time each YUGAS and should prove the occurences in each period appropriately

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: