உலக நாடுகளில் காதலர் தினம்!

10 02 2010

அமெரிக்காவில் மழலையர் வகுப்பில் துவங்கி பல்கலைக் கழகம் வரையிலும் வாலண்டைன் பார்ட்டி நடக்கிறது.

மழலையர் வகுப்பில் விபரம் புரியாத அந்தப்பிஞ்சுகள் கர்ம சிரத்தையாக தாமே வாலண்டைன் வாழ்த்து அட்டை தயாரிப்பது விதவிதமான “வாழ்த்து அட்டைகள்  என்று நேரத்தை செலவழித்து  செய்வதைப் பார்த்தால் நம் நாட்டில்  மாணவர்கள் கூட இது போன்று ஈடுபடுவதில்லை என்றே சொல்லவேண்டும்.

மழலையர் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு காகிதப்பை பிப்ரவரி முதல் வரத்தில் கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பில் பயிலும் குழந்தைகள் பெயர் அடங்கிய பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள்.ஒவ்வொரு குழந்தையும் அத்துனை பேர்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரித்துஅல்லது கடையில் வாங்கி பிஞ்சு விரல்களால் வண்ணக்குச்சிகளை வைத்து எழுதி வரைந்து கூடவே மிட்டாய்கள்  சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளையும் கொண்டுபோய் பள்ளியில் உள்ள அந்தந்த மாணவர்கள் பைகளில் பெயரைப் படித்து சந்தோஷமாக அவரவர் பைகளில் போடும்போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணைஏது? உணவு விடுதிகள் கேளிக்கை அரங்குகளில் முன்பதிவு செய்துவிட்டு புத்தாடைகள் சகிதமாக,இளைஞர்களும்  யுவதிகள் , வயதான ஜோடிகள் உட்பட நடனங்களிலும்  பார்ட்டிகளிலும் அமெரிக்காவில் அமரிக்கையாக சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நீந்தி மகிழ்கிற ஒப்பற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் 1898 நவம்பர் 21ம் தேதி உலகின்முதல் வாலண்டைன் மியூசியம் திறந்து வைக்கப்பட்டது. பிரிட்டன்…பிரிட்டிஷ் குழந்தைகள் இந் நாளில் விஷேசமான பாடல்களைப்பாடிக்கொண்டாடுவார்கள். பெரியவர்கள் இவர்களுக்கு பரிசுகள் பழங்கள் கேக்குகள் சொக்லேட்கள் மற்றும் பணமும் கொடுத்து மகிழ்வார்கள்.

இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இந் நாளில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட”வாலண்டின் பண்ணை பிறந்த நாள் கேக் போல வாங்கி நண்பர்களுக்கும் தங்கள்மனங்கவர்ந்தவர்களுக்கும் அளித்து மகிழ்வார்கள். 1700களில்….வனிதையர்கள் தங்கள் வருங்கால இணையைத் தேர்வு செய்ய 1700களில் நூதனமான” வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து மனிதப் புனிதர் வாலண்டைன் தினம் உலகம் கொண்டாடத் தலைப்பட்டது.

,இத்தாலியில் இந்நாளை விசேஷ நாளாக அனுசரிப்பதோடு பெரிய வாலண்டைன் விருந்துடன்  கொண்டாடி மகிழுகின்றனர். மேலும்திருமண வயதைக் கடந்தும் தள்ளிப் போகிற? தினம் என்கிற ஏக்கங்களில் அழுதகண்ணும் சிந்திய மூக்குமாக இருக்கிர மங்கையர்க்கு இந்த நாள் மகிழ்ச்சிப்பூக்களை மலர வைக்கிற மங்கல நாள்! சூரியன் சுதாரித்து எழுமுன் அதிகாலையில்எழுந்து நீராடி தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஜன்னல் முன்னால் அமர்ந்துவிடுவார்களாம். அறிந்தும் அறியாமல் அவ்வழியாக வருகிற வாலிபர்களை இந்த”ஜன்னல் மின்னல்கள்” கண்களால் தூதுவிடுவார்கள். வேல் விழிகளின் வீச்சில் சிக்கிக் கொண்டால்…  பின்னர் ஆலயங்களில்  தம்பதியராகி விடுவார்களாம்.

 இந்தவழக்கம் வாழையடி வாழையாக இன்றும் இத்தாலியிலும் பிரிட்டனிலும் கூடநிலவுகிறது. அந்தக்காலத்தில் இப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக “ஷேக்ஸ்பியர் ” இருக்கிறார். தனது பிரபல நாடகமான “ஹாம்லெட்டில்” வரும்”ஓப்பெலியா” என்ற பெண் கதா பாத்திரம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இந்தசம்பவத்தைப் பாடுவதாக அமைத்துள்ளதிலிருந்து அறியலாம்.

தங்களுக்குப் பிடித்தமான ஒரு சிலரின் பெயர்களைக் காகிதங்களில் எழுதி களிமண்ணில் மடித்து குளத்துத் தண்ணீரில்போடுவார்கள். முதலில் எந்தப் பெயர் கொண்ட காகிதம் தண்ணீருக்கு மேல் தலைகாட்டுகிறதோ அந்தக் காகிதத்தில் உள்ள நபர் தான் விசுவாசமான கணவராக இருப்பார் என்று கருதி தேர்ந்தெடுப்பார்களாம். அந்த நாள் பெப்ரவரி 14!

மத்திய இங்கிலாந்தில் திருமணமாகாத பெண்கள் ஒரு விதமான வாசனை தரும்இலைகள் ஐந்தை தங்கள் தலையணையின் நான்கு முனைகளிலும் ஒன்றை நடுவிலும்வைத்துக் கொண்டு வாலண்டைன் தினத்தன்று தூங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தனராம். அப்படித் தூங்கும் போது கன்னியரின் கனவில் வருங்காலக்கணவன் வருவான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்ததாம்.


டென்மார்க்கில் ஒரு வகை வெள்ளைப் பூக்களை தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொள்வர். டேனிஷ் வாலிபர்கள் “கெக்கேப்ரேவ்” என்ற வாலண்டைன் கடிதத்தை எழுதி வனிதையர்களுக்கு அனுப்புவர்.

தமாஷான வசனங்களையோ கவிதைகளையோ எழுதி பெயரை எழுதுவதற்குப் பதிலாக புள்ளிகளை வைத்து அனுப்புவார்கள். பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறதோ அத்தனை புள்ளிகள் இருக்கும்.

 இதை வைத்து தமக்கு வலை வீசிய வசீகரன் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு “ஈஸ்ட்டர் எக்” கொடுத்து அரவனைத்துக்” கொள்வார்கள்.

பிரிட்டனில் பல இடங்களில் இந்தப் புள்ளிக் கடிதம் மூலம்தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து பரவிய வாலண்டைன் தினம் வரலாறுஅறியாமலே உலகம் முழுக்க “காதலர் தினம்” என்கிறதாகவே பீடு நடை போடத்துவங்கியுள்ளது. கீழை நாடுகளில் மேல்தட்டு மக்களிடையே மட்டுமே வாலண்டைன்வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

வாலண்டைன் பற்றி பல கிளைக் கதைகள் கூட முளைக்கலாம்.வாலண்டைன் வாழ்ந்த காலத்தைவிட வரலாறுகளைத் தேடிப் பிடித்து வருங்காலச்சந்ததியினருக்கு பொக்கிஷமாக்கி வைக்கிற பேராளர்கள் ஏராளமாய் இருக்கிறகாலமிது.  எனவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பே அன்பு ஆசை நேசம் பாசம் பற்று காதல் என்கிற மூவெழுத்துக்கள் முகிழ்த்துவிட்டது.

இன்னும் மூன்று நூற்றாண்டுகள் பிறந்து வந்தாலும் இந்த மூவெழுத்துக்குரிய தினமாக வாலண்டைன் தினம் வாழும்! வாழ்த்து அட்டை…பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கிறிஸ்துமஸ¤க்கும் முன்பே வாழ்த்து”  இந்த நாளுக்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் அலங்கரிக்கப்பட்டஹார்ட்டுகள்  வீட்டை அலங்கரிப்பதற்கான பொருட்களின் கோலாகலமான விற்பனைது வங்கிவிடுகிறது.

பெரிய பெரிய சுவரொட்டிகள்  விளம்பரங்களிலும் கண்ணைப்பறிக்கும் மின் விளக்குகளிலும் கடைகள் வரவேற்பு வாசிக்கும். இந்தநாளுக்கான விசேஷ  கேக்குகளும்  பூங்கொத்துகளும்  அலங்காரக்காகிதப் பூக்களும்  மலரத் துடிக்கும் ரோஜாக்களையும் வாங்கிடும் கூட்டங்கள்  நாள் நெருங்க நெருங்க அதிகரிக்கிறது. மிக நேர்த்தியான வண்ணக் காகிதங்களில் செய்யப்பட்டு சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில்பரிசுப் பொருட்களை வாங்கி வெளியேறும் இளைஞர்கள் யுவதிகள் கூட்டம் 1800களில் துவங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் பெண் ஓவியர் கேட்டி கிரீனவே 1865 களில் வாழ்த்து அட்டைகளைவெளியிட்டார். மடிக்கப்பட்ட அட்டையின் உட்பக்கம் வாழ்த்துச் செய்திஎழுதுவதற்காகக் காலியிடம் விட்டும்  வெளிப்பக்கங்களில் குழந்தைகள் பூந்தோட்டங்கள் போன்ற ஓவியங்களுடன் வெளியிட்டார். இதனைக் கண்டஅமெரிக்கப் பதிப்பாளர் எஸ்தர் ஹாவ் லாண்ட் ( மசாச்சுசெட்ஸ் ) முதலில்வாழ்த்து அட்டைகள் தயாரித்து கடைகளில் ஆடர் பெற்றார். பெண்கள் சிலரைவேலைக்கு வைத்துக் கொண்டு விதவிதமான வாலண்டைன் தின வாழ்த்து அட்டையைச்செய்து விற்கத் துவங்கினார்.

நல்ல வரவேற்பு கிடைக்க கைவேலைப்பாடுகளுடன்கூடிய புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்தில் அதாவது 1870ல் ஒரு லட்சம் டாலர் லாபம் ஈட்டினார். ஒரு டாலரிலிருந்து 35 டாலர்வரை வாலண்டைன் வாழ்த்து அட்டை விற்று விற்பனையில் ஒரு ரெக்கேர்ட் ஏற்படுத்தினார். சிகாகோ அஞ்சலகத்துக்கு திடீரென் வந்து குவிந்த 25லட்சம் வாழ்த்து அட்டைகளை நாங்கள் டெலிவரி செய்யமாட்டோம் என்று தெருவில் வீசி எறிந்த நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கது.

கவிதைகள்…கவிதைகள்…வாலண்டைன் தின தலைப்பில் கவிதைப் புத்தகங்கள் இதுவரை 69 வெளிவந்துள்ளது. அமெரிக்க கவிஞர் “எட்கர் ஆல்பர்ட் கெஸ்ட் (1881-1959) எழுதிய வாலண்டைன்கவிதை 1919ல் மிகுந்த வரவேற்பு பெற்ற கவிதையாகும்.

“டிரேஸிபெர்”ட்டின் சந்தித்தால் “இப்போது இதயங்கள் தனிமையில் இல்லை ” போன்ற கவிதைகள் மிகப்பிரபலமானது. வாலண்டைன் தின கவிதைகள் இதுவரை 1913 வெளிவந்திருப்பதாகபுத்தக நிறுவனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.ரோஜா…ஏறக்குறைய காதலர் உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வரும் ஒரு காதல்சின்னம் தான் “ரோஜா” என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. 35 மில்லியன் வருடங்களாக உலகில் வாசமளித்து வாசம்செய்கிற பூ ரோஜாப்பூ! வரலாறாக இருக்கிற ரோசாப் பூவிற்க்குக் கூட சிலரகசியம் உண்டு தெரியுமா?

வாலண்டைன் தினத்தன்று ஒரே ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்தால் “நான் உன்னைமனதார நேசிக்கிறேன்” என்று சொல்லாமல் “அந்த” அடையாளம் சொல்லிவிடும்! ஒரு “வெள்ளை ரோஜா” வைக் கொடுத்தால் ‘ நீதான் என் சொர்க்கம் ‘ என்று புரியவைக்கும்! ஒரு வெள்ளை ரோஜாவோடு ஒரு ரோஜா மொட்டும் சேர்த்துக் கொடுத்தால் மென்மையாகப் பொருள் சொல்லும்!

அது சரி…எத்தனையோ வாசமான மலர்கள் இருக்க ரோஜாவை ஏன் காதலர்கள்தேர்ந்தெடுத்தார்கள்?
காரணமில்லாமல் இல்லை.

ரோஸ் என்ற வர்த்தையைச் சற்று மாற்றி அமைத்துப் பாருங்கள்.
“ஈரோஸ்” என்று வரும்!
காதல் கடவுளல்லவா
“ஈரோஸ்”….  அதான்!!!

கீப்பர் ஓப் த ஸ்டார்ஸ் என்ற தலைப்பில் வெளிவந்த இதயங்கள் இரண்டுசந்தித்தால் “இப்போது இதயங்கள் தனிமையில் இல்லை ” போன்ற கவிதைகள் மிகப்பிரபலமானது. வாலண்டைன் தின கவிதைகள் இதுவரை 22,000 வெளிவந்திருப்பதாக புத்தக நிறுவனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. ரோஜா…ஏறக்குறைய காதலர் உலகில்  எங்கும் வலம் வரும் ஒரு காதல்சின்னம் தான் ”

எல்.ஜே.ஜீவராஜ்

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: