சுதந்திர தினமும் அடிமை நாளும்!

10 02 2010

இலங்கையின் 62 வது சுதந்திர தின நிகழ்வு எதிர் வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி. அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற எமது சுதந்திர  தினத்திலேயே உலகம் முழுவதையும் அடிமைப்படுத்திக் கொண்ட புற்று நோய் தினம். மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் மிலேனிய யுகத்தினையும் தாண்டி நாகரீகமான முறையில் வளர்ந்து வரும்  கன்சர் நோய.; உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு தினமாக அனு~;டிக்கப்படும் ஒரு கவலைக்குரிய தினமாகும்.

புற்;று நோயை தடுத்தல்,அதிலிருந்து இருந்து விலகி இருத்தல், புற்றுநோய்க்கான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற வற்றினை கருப்பொருளாகக் கொண்டு இம் முறை கன்சர் எதர்ப்பு தினம் அனு~;டிக்கப்பட உள்ளது. என உலக புற்றுநோய் எதிர்ப்புக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக 1933 ஆம் ஆண்டு கன்சர் எதிர்ப்பு தினம் அனு~;டிக்கப்பட்டது.  காலப்பகுதியில் 300 க்கு மேற்பட்ட கன்சர் நோயாளிகள் 100 நாடுகளில் இருந்தமையும் கண்டறியப்பட்டது.
எமது நாட்டில் தேசிய கன்சர் புற்று நோய் வைத்திய சாலை மகரகமவில் அமைந்துள்ளது. 54 வருடங்களின் பின்னர் இந்த வருடமே கன்சர் புற்று நோய் எதிர்ப்புக்கான கட்டுப்படுத்தும்  அமைப்பில் இலங்கை  இணைந்து கொண்டுள்ளது.

9 காரணங்களால் பரவக்கூயது. இப் புற்று நோயானது நூற்றுக்கும் அதிகமான  வகைகளில் கண்டறியப்பட்டுள்ளது. உடம்பின் எந்தப் பகுதியும் புற்றுநோயால் பாதிக்கப்படலாம். 12 மில்லியன் மக்கள் இந்நோயினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகில் 20 வீதமானவர்கள் எனவும் கன்சர் எதிர்ப்புக்கான அமைப்பின் விரிவுரையாளர் டேவிட் ஹில் தெரிவித்துள்ளார். உடம்பில் ஏற்படும் புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பகுதி முற்றாகக் குணமாக்கக் கூடியது.

முதலில் மனிதனின் மிகச் சிறிய மனிதக் கலத்திலிருந்து இந்நோய் பரவ ஆரம்பிக்கிறது.என்றாலும் முழு உடலையுமே முற்றாகப் பாதிக்கும் இப்புற்று நோய் ஒரு  தொற்று நோய்யாகும். வாழ்க்கை மாற்றம், பாதுகாப்பான பழக்க வழக்கங்கள்  போன்ற செயற்பாடுகளின் காரணமாக இந் நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும். முதலாவதாக பி வைரஸ் எனும் கிருமி தாக்கத்தினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு ஆண் ஒருவர் உயிரிழந்தார்.        மூன்றாவதாக கன்சர் நோயினால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.  

ஆங்காங்கே உயிர்களைக் காவு கொள்ளக் கூடிய புற்று நோய் தாக்கமானது 2004 ஆம் ஆண்டு 7.4 மில்லியன் புற்றுநோயாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். அவ்வாண்டு மொத்த இறப்புகளில் இது 13 சதவீதமாகும்.நுரையீரல் புற்றுநோயால் ஆண்டுதோறும் 1.3 மில்லியன் நோயாளர்கள் உயிரிழக்கிறார்கள்.2005 முதல் 2015 வரை 84 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என எதிர்வு கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டு 12 மில்லியன் பேர் உயிரிழப்படலாம் என அஞ்சப்படுகிறது.70 வீதமான புற்றுநோயாளர்கள் நடுத்தர, குறைந்த வருமானம் பெறுபவர்கள்.புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான காரணியாக விளங்குகிறது.

அபிவிருத்தி அடைந்த நாட்டிற்கும் அபிவிருத்தி அடையாத நாட்டிற்கு மிடையில் புற்று நோய் தொற்றானது. 26 க்கு 8 வீதமாக உள்ளது. உலகிலே அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் புற்று நோயினாலே மரிக்கின்றனர்.                 

புகைத்தலை நிறுத்துவோம், ஆரோக்கியமான உடலைப் பராமரிப்போம்,மது பாவனையைக் குறைப்போம், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவோம் போன்றவற்றை மனதில் வைத்து செயற்படுவோம்.

இந்த ஆண்டில் புற்று நோயhல்  பலியானோர்  எண்ணிக்கை சர்வதேச அளவில் 76 லட்சத்தைத் தாண்டும் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல இயக்குனர் ஷின் யங் சூ வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலகில் எட்டு பேர் இறந்தால் அதில் ஒருவர் புற்றுநோயால் பலியாகும் நிலை உள்ளது. ஆனால் இந்த இறப்புகள் தவிர்க்கக் கூடியது தான் என்பது கவனிக்கத்தக்கது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடி மக்களுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகளின் மூலமே தடுக்கக் கூடியவை தான்.
புகை பிடிப்பதை தவிர்த்தல்இ ஆரோக்கியமான உணவுஇ உடற்பயிற்சிஇ மது பழக்கத்தை கட்டுப்படுத்துதல்இ போதை பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விஷயங்களின் மூலமே பல்வேறு புற்றுநோய்கள் வராமல் தடுத்துவிடலாம்.

பலவிதமான புற்றுநோய்களுக்கு புகைப் பழக்கத்தை ஒதுக்குவதே மிகப்பெரிய தனியொரு தற்காப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
அதோடு 30 நிமிட நல்ல உடற்பயிற்சிகளின் மூலம் மார்பு உள்ளிட்ட சில புற்றுநோய்களை கட்டுப்படுத்த முடியும்’ என கூறப்பட்டுள்ளது

புற்றுநோய் தடுப்புஇ கண்டுபிடிப்புஇ சிகிச்சை போன்றவை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியாக வேண்டும்.
புற்றுநோய் குறித்து உலகளாவிய ஒரு பயம் இருக்கிறது. ஆனால் சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் பல புற்றுநோய்களில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும்.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: