நான் காதலினால் இம்சிக்கப்பட்டவள். என்னைப் பொறுத்தவரை காதலர் தினம் என்பது ஒரு வியாபார நோக்கு என்பதேயாகும்.இருந்தும்…… காதல்!

10 02 2010

ஆண்கள்  பொண்களுக்கு தாஜ் மகால் சிலைகள் வாழ்த்த அட்டைகள்   பூச் சகாத்துக்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் , நகைகள் என வாங்கிக் கொடுத்து காதலர் தினமன்று காசைக் கரியாக்கிறாங்கள். ,ப்படியான காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-?

வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் நடித்துக்கொண்டே வாழ வேண்டிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் காதலர் தினம்.

காதல் வயப்பட்டவர்கள். காதல் வயப்பட இருப்பவர்கள் காதலால் இம்சிக்கப்பட்டவர்கள் இப்படி……………நீண்டு கொண்டே போகும். வாழ்க்கையில் எந்தவொரு மனிதனையும் தனது எல்லைக்கம் கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருக்கம் காதலர் தினம் அவசியமானதா?

,தற்காக நான் காதலர் தினத்தை அவமதிக்கவோ அல்லது வேண்டாம் என கறுப்பப் பட்டி காட்டவோ ,ல்லை  வாழ்கையில் அழகானதும் நேர்த்தியானதுமான சில விசயங்களை நாம் வாழ்ந்து பார்க்க முடியும். 

ஆனால் அவைகளை விவரித்தல் அவைகளுக்கு பொருள் கூறுதல் மிகவும் கடினம்.அன்பு  காதல் போன்றவைகளும் அதுபோலத்தான்.அவற்றை உணர்ந்து கொண்டவர்களால் விவரிக்க முடியாது விவரிப்பவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது.

ஒரு மனிதனுக்கு உள்ளே எந்த அளவுக்கு காதல் வளர்கிறதோ அந்த அளவுக்கு அவன் அவனை சுற்றி உள்ளவர்களிடம் அன்பை பரப்ப முடியும். அந்தளவுக்கு அவன் ஒரு பூரண மனிதனாகவும் இருக்க முடியும்.

“காதல் இல்லாதவர்கள் காமத்தால் மட்டுமே நிறைந்திருப்பர்” காதல் ஒரு பரவச நிலை……. ஆன்மாவின் ஆழத்தை காணுகின்ற ஒரு பேரனுபவம். நமது இருப்பின் உச்ச நிலையை தொடுகின்ற இயல்பான இன்ப நிலை தூய சந்தோஷமும் கண்ணுக்கு புலப்படாத பரவச நிலையையும் நமக்களிக்கும் இந்த காதல்.

 எந்த விசாரணையும் எந்த வரைமுறைகளும், வன்முறைகளும்  இல்லாமல் வாழ்கின்ற ஒரு ஆத்மீக  நிலை. என்று கூட சொல்லாம் 
என்னை காதல் உயரத்தை நோக்கியே உந்தி இருக்கிறது…… அதை இன்று வாழ்த்தினால் என்ன அல்லது என்றுமே வாழ்த்தினால் என்ன….. காதலித்தவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்காதவர்கள், நம் எல்லோரிடத்திலும் காதல் உள்ளது.

உலக நாடுகளில் மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் சீனர்களின் பண்பாட்டில் கூட காதலர் தினம் முக்கிய இடம் வகிக்கின்றது. … காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது. … பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து  பரவலாக உலகம் முழுக்கபரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம்.

நண்பர்கள் காதலர்கள் ஏன் கணவன் – மனைவி இப்படி நெஞ்சில் நேசங்களைவளர்த்துக் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் நேரில் அஞ்சல் மூலமாக மகிழ்ச்சி நிறைந்த “வாலண்டைன் வாழ்த்துக்கள்” என்று சொல்லி தங்களை வெளிப்படுத்திக்கொள்கிற உற்சாக தினம் இது! 

மையல் கொண்ட இரு இதயங்களுக்கு  தங்கள் உள்ளக் கிடக்கையை உணர்த்துகிற உணர்ச்சிப்பூர்வமான நாள்இது! இதன் தொடக்கம் என்ன? எப்படி? ஏன்? என்ற கேள்விகள் எழுவது இயற்கை.

ரோமானியர்கள் லூப்பர்காலியா என்ற திருவிழா கொண்டாடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றுக்கும்மேற்பட்ட புனிதர்களைக் குறிக்கும் வகையில் இந்த நாளைக் கொண்டாடியதாகவும்ஒரு கருத்துநிலவுகிறது.

இன்னும் சிலர் பெப்ரவரி .14ம் தேதி மத்திய இங்கிலாந்தில்ஒருவிதப் பறவைகள் மூலமாகத் தங்கள் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேயப் பழமைவாதிகளின் இந்த நாளையே வாலண்டைன் தினமாகக் கொண்டாடியதாகவும் கருத்து நிலவுகிறது.

ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் வாலண்டைன் தினம் கொண்டாடத்  துவங்கியதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. ரோமானியச் சக்கரவர்த்திகிளாடிஸ்  கொடூரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்தகாலகட்டம்அது! முட்டாள் தனமாக தமது இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிப்பான். இதனால் இராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர்.

புதிதாக இராணுவத்தில் சேர யாரும் முன்வரவில்லை. தனது மந்திரி பரிவாரங்களை அழைத்து ஆலோசனை நடத்தினான். உருப்படியாக ஒருவரும் சொல்லவில்லை என கோபப்பட்டான்.

அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டு எழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்த  அமைச்சரை அழைத்து வரச் சொன்னான். அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார்.

“நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பை உடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள் ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமே செய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது.

இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே இப்போதே அமலுக்குவருகிறது” என்றான் அரசன்.

 அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க…கிளாடிஸின் உறுமல்” மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான். அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.
அரசனின் அறிவிப்புக்கு காரணம் திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள்.

திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியை விட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள்.  போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள்.

வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது.திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.

ஆணும் பெண்ணும் கூடிக் களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதியில் கடவுளேதாம் ஏவாளைப் படைத்தார். இறைவன் அங்கீகரித்த இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.

முதல் வாலண்டைன் வாழ்த்து!எட்டப்ப ஒற்றர்கள் மூலம் இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைன்”  நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் அன்பு பூத்தது.

மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்தசிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள் சிதைந்தது. உருக்குலைந்து போனாள் அஸ்டோரியஸ்.

அஸ்டோரியஸக்கு அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று செய்தி சுமந்து வந்தது. விழி இருந்தும் வழி இல்லாமல் – மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.

விழி இழந்து – பார்க்க வழி இழந்து, நீ மன வலி தாங்காது கதறும் ஒலி கேட்டும், உனை மீட்க வழி தெரியாமல் மக்களுக்காக பலியாடாய் போகிறேன்; நீ ஒளியாய் வாழு! பிறருக்கு வழியாய் இரு!! சந்தோஷ ஒளி உன் கண்களில்மிளிறும்!! -உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரந்து விரிந்து நிறைந்து நிற்கிற வைர வரி வாசகமாகும். இது மட்டுமேஉண்மையாக இருக்குமானால் இந்தச் செய்தியைத் தாங்கி வந்த முதல் வாலண்டைன்அட்டை இதுவாகத்தானிருக்கும்.

வாலண்டைனின் செய்தியை தோழி வாசிக்க அஸ்டோரியஸின் கண்கள் கண்ணீர் பூக்களைச் செறிந்த அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது.

அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்து தன்னையே பலி கொடுத்த வாலண்டைன் “ரோம் ” மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார்.

ரோமானிய கிறிஸ்தவ ஆலயங்களில்  ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது “பாகான்” விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. பாகான் என்றால் மதமற்றவன் என்றுபொருள். பின்னர் இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் ( 496 ம் ஆண்டு ) தொடக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

எல்.ஜே.ஜீவராஜ்

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: