நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரிக்கப்பட்டதேன்?

29 04 2010

 நடைபெற்று முடிந்த 2010 ஆம் ஆண்டுக்கான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடைமுறைகளில் செல்லுபடியான வாக்குகளுக்குச் சரிபாதியாக நிராகரிக்கப்பட்டவையும் இருந்தன.

இம்முறை தேர்தலில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்டவை 52 வீதமான வாக்குகள். இவற்றுக்குக் காரணம் கட்சிகள் , கட்சி ஆதரவாளர்கள் , சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் ஏற்பட்ட தகராறுகளும், உட்பூசல்களும், அடுத்தடுத்து இடம்பெற்ற ஜனாதிபதி – நாடாளுமன்ற தேர்தல்களும் தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அளிக்கப்பட்ட மொத்த 52 வீதமான வாக்குகளில், செல்லுபடியானவையும் நிராகரிக்கப்பட்டவையும் சரி சமமாகவே இருந்தன. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் நிராகரிக்கப்பட்டவை 596,972.

அநுராதபுரம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 457,137 – நிராகரிக்கப்பட்டவை 37,236 0. பொலநறுவை மாவட்டம் அளிக்கப்பட்டவை 186,269 – நிராகரிக்கப்பட்டவை 14,798. நுவரெலியா மாவட்டம் அளிக்கப்பட்டவை 303,470 – நிராகரிக்கப்பட்டவை 37.236. யாழ்ப்பாணம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 168,277 – நிராகரிக்கப்பட்டவை 19,774.

மட்டக்களப்பு மாவட்டம் அளிக்கப்பட்டவை 195,367 – நிராகரிக்கப்பட்டவை 14,749. வன்னி மாவட்டம் அளிக்கப்பட்டவை 117,185 – நிராகரிக்கப்பட்டவை 10,208. கேகாலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 388,420 – நிராகரிக்கப்பட்டவை 25,965. களுத்துறை மாவட்டம் அளிக்கப்பட்டவை 544,606 – நிராகரிக்கப்பட்டவை 51,751. பதுளை மாவட்டம் அளிக்கப்பட்டவை 387,847 – நிராகரிக்கப்பட்டவை 24,169. புத்தளம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 280,354 – நிராகரிக்கப்பட்டவை 21,562.

அம்பாந்தோட்டை மாவட்டம் அளிக்கப்பட்டவை 289,294 – நிராகரிக்கப்பட்டவை 11,240. கம்பஹா மாவட்டம் அளிக்கப்பட்டவை 980,467 – நிராகரிக்கப்பட்டவை 50,234. குருநாகல் மாவட்டம் அளிக்கப்பட்டவை 725,566 – நிராகரிக்கப்பட்டவை 53,130. மாத்தறை மாவட்டம் அளிக்கப்பட்டவை 341,871 – நிராகரிக்கப்பட்டவை 14,289.

மொனராகலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 169,640 – நிராகரிக்கப்பட்டவை 10,491. இரத்தினபுரி மாவட்டம் அளிக்கப்பட்டவை 480,395 நிராகரிக்கப்பட்டவை 37,022. திகாமடுல்லை மாவட்டம் அளிக்கப்பட்டவை – 272,462 நிராகரிக்கப்பட்டவை 15,516. கொழும்பு மாவட்டம் அளிக்கப்பட்டவை 989,729 – நிராகரிக்கப்பட்டவை 50,354. காலி மாவட்டம் அளிக்கப்பட்டவை 485,401- நிராகரிக்கப்பட்டவை 24,013.

மாத்தளை மாவட்டம் அளிக்கப்பட்டவை 215,060 – நிராகரிக்கப்பட்டவை 19,310. கண்டி மாவட்டம் அளிக்கப்பட்டவை 599,226 – நிராகரிக்கப்பட்டவை 58,333. திருகோணமலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 43,454 – நிராகரிக்கப்பட்டவை 3,483.

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் அதிகரிப்புக்குக் காரணம் மக்கள் மத்தியில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் விழிப்புணர்வின்மை எனக் கூறலாம். ஒவ்வொரு தேர்தல் நடவடிக்கையின் போதும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கஃபே போன்ற அமைப்புக்களும் வாக்களிக்கும் முறை தொடர்பில் முன்கூட்டிய அறிவுரைகள் வழங்கி வருவது இயல்பு. எனினும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மேற்படி அறிவுறுத்தல்கள் எந்தளவுக்கு இருந்தன என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

சுமார் 2 கோடி மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற நாடளாவிய ரீதியில் எத்தனை அரசியல் கட்சிகள்? எத்தனை சுயேச்சைக் குழுக்கள்?

இம்முறை வாக்குச்சீட்டுக்களில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் பெயர், சின்னம், வாக்குப் பட்டியல் என்பனவற்றுடன் வழமைக்கு மாறாக, புள்ளடியிடுவதற்குப் பென்சிலுக்குப் பதில் பேனா மற்றும் மை பூசப்பட்ட கை விரலில் மாற்றம் – இப்படிப் பல மாற்றங்கள். இவற்றையும் வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்குக் காரணங்களாகக் கொள்ளலாம்.

இனிவரும் காலங்களிலாவது, வாக்களிப்பு நடவடிக்கைகளின் போது தேர்தல் திணைக்களம் அவதானமாகச் செயற்பட வேண்டும். இல்லையேல் நிராகரிக்கப்படும் வாக்குகள் மேலும் அதிகரிக்குமேயல்லாது குறைவடையாது என்பது திண்ணம்.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=22447

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: