இன்று உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம் _

3 05 2010
உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக பத்திரிகை சுதந்திர தினம், பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனத்தின் பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி வருடாந்தம் மே 3ஆம் திகதி பத்திரிகைச் சுதந்திர தினமான ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆபிரிக்கப் பத்திரிகைகள் கூட்டாக இணைந்து, 1991ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி ‘ பத்திரிகை சுதந்திர சாசனத்’தை முன்வைத்தனர்.

இந்த நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.

இந்த விருது 1986 டிசம்பர் 17 இல் கொல்லப்பட்ட கொலம்பிய பத்திரிகையாளர் Guillermo Cano Isaza என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சுதந்திர தினத்தில் அனைத்து நாட்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“ஊடகத்தின் சேவையை சிவில் சமூகம், அரசாங்கம் மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விடும் நபர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

கருத்துச் சுதந்திரம் மக்களின் மிக அடிப்படையான சுதந்திரங்களில் ஒன்று.

சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 19ஆம் சரத்தில் ஊடக சுதந்திரம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் சில நாடுகளில் இதற்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை.

கடந்த வருடத்தில் மாத்திரம் உலகில் 77 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கருத்துச் சுதந்திரம் குறித்த புதிய சட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்” எனக் கூறியுள்ளார். 

 

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: