உலகில் மிகச் சிறிய நாடுகளின் பாரம்பரியம்

11 05 2010

புவியின் மொத்த பரப்பளவு  510,072,000  ஆகும் 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²) நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பரந்து இருக்கும் இப்புவியின் பரப்பளவில் எத்தனை 246 நாடுகளை அதிகார பூர்வமாக கொண்டுள்ள உலக நாடுகள், அதிகாரங்கள்  அத்தனையும் முழுமையாக தெரிந்தவர்கள் யார் என்றால் அது நீர் மேல் எழுத்துப் போல் தான் .
இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் அரசியலையும் பயங்கரவாதர்த்தையும் மட்டும் பற்றி கதைப்பது. அது தான் சின்ன மாறுதலுக்காக உலகில் மிகச் சிறிய துணுக்களாக ஆங்காங்கே தெரியும் மிகச் சிறிய நாடுகளைப் பற்றி களை பிடுங்க முற்படுகின்றேன்.

இன்றைய காலம் வரையிலும் அபிவிருத்தி, அனுஆயுதம் , வல்லரசு நாடுகளையும் அதன் செயற்பாடுகளயும்  மட்டுமே சிந்தித்து பழக்கப்பட்ட நாம் இன்று…  நிலப்பரப்பில் குறைந்ததும் மக்கள் தொகையிலும் அதிகாரத்திலும் வலுவிழந்து தனி ஒரு அங்கமாக ஏனைய நாடுகளின் உறவுகளை பேனி வரும்  ஐக்கிய நாடுகளின் அங்கிகாரம் பெற்ற சிறிய நாடுகளை பற்றிய தொகுப்பு .
உலகின் மிக சிறிய நாடாக இருப்பது வத்திகான் ஆகும்.வத்திகான்  110ஏக்கர் பரப்பளவை கொண்ட சுய ஆட்சியை உடைய நாடாகும். சுய ஆட்சி என்றால் தனி ஒரு அரசு என்றல்ல அரசு அதன் அனைத்து மக்களையும்  உள்வாங்கிக் கொண்டு மக்கள் அனைவரது ஆலோசனையின் கீழும் இடம் பெறும் ஒரு சிறிய கூட்டுக் குடும்பம் அல்லது, கிறிஸ்தவ சபை எனலாம். 1929ஆம் ஆண்டு உருவான இந்த நாட்டின் தலைவராக புனித பாப்பரசர் விளங்குகிறார்.
முதன் முதலாக குடிசன மதிப்பீடு எழுதும் போது வத்திக்கானில் 2500 மக்கள் பதியப்பட்டனர் என வேதாகமம் கூறுகிறது.2005 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் படி 921 எனினும் தற்போது சுமார் 800 மக்கள் வத்திக்கானின் ஆட்சி அதிகாரங்கள் பெற்று தமது நாட்டை நிர்வகிக்கின்றனர்.  நிரந்தர குடியுரிமை மத குருக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது உலகம் முழுதும் வாழும்  பில்லியனுக்கும் மேற்பட்ட கத்தோலிகர்களின் தலைமை பீடமாக வத்திகான் விளங்குகின்றது.
பெரும்பாலும் இலத்தின் மொழியே இங்கு பயன்படுத்த படுகிறது. பொருளாதாரம் என்று பார்த்தல் நிதி சேகரிப்பு,சுற்றுலா பயணிகள்,நினைவு சின்ன விற்பனை,அனுமதி கட்டணங்கள் என்பன மூலமே வருவாய் கிடைக்கப்பெறுகின்றது.
போக்குவரத்து துறையை பொறுத்த வரை  பெருந்தெருக்களோ,விமான நிலையமோ,துறை முகமோ கிடையாது.ஒரு குறுந்தூர இரயில் சேவை ,ஒரு விமான  தளம் மட்டுமே உள்ளன.இதை தவிர தொலைபேசி,தபால்,வானொலி,வங்கி மற்றும் இணைய சேவைகளும் உள்ளன.
உலகில் இலத்தின் மொழியில் விளக்கங்களை கொண்ட ATM இயந்திரம் இங்குதான் உள்ளது.இந்த நாட்டின் தபால் சேவை உலகின் தலை சிறந்த தபால் சேவைகளில் ஒன்றாக கருதபடுகிறது.
வத்திகான் நாட்டு இராணுவத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் சுவிஸ் நாட்டு பிரஜைகள். வத்திகான் இராணுவத்தில் சேர சுவிஸ் கத்தோலிக்க பிரஜையாக இருக்கவேண்டியது கட்டாயமாகும்.இராணுவத்தின் முக்கிய பணி பாப்பரசரையும் ஏனைய குருக்களையும் பாதுகாப்பது மற்றும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகும்.
விளையாட்டு துறையை பொறுத்த வரை வத்திகான் நாட்டுக்கு தனியான கால்பந்தாட்ட அணி உள்ளது. உலகின் மிக சிறிய நாடாக இருந்தாலும் உலகின் மிக பலம் வாய்ந்த ஒரு அரசியல் சக்திகளில் ஒன்றாக வத்திகான் விளங்குகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் அமெரிக்காவின் செல்லக்குழந்தை எனலாம்.

இரண்டாவது சிறிய நாடு மொனோகோ மேற்கு ஐரோப்பாவின் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு அருகில் அமைந்துள்ளது மொனோகோ. மொத்த பரப்பளவு சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டராகும்.
சிறிய பரபளவுக்குள் சுமார் 33,000 பேர் வசிக்கின்றனர்.

பொருளாதாரத்தை பொறுட்த்தவரை சுற்றுலாதுறை கைகொடுக்கிறது. உலக நாடுகளில் வருமான வரி இல்லாத நாடு.  நாடுகளில் இருந்து செல்வந்தர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய இதுவே காரணமாகும்.இராணுவம் இங்கு கிடையாது..சிறிய பொலிஸ் படை உள்ளது. மொனோகோவின் பாதுகாப்புக்கான தாய்மை பிரான்ஸ். ‘குட்டிநாடு’ உலகளாவிய ரீதியில் ஆறாவது இடம் பிடித்துள்ளது.

மூன்றாவது இடம்  இருப்பது Pitcairn தீவுகளாகும். எரிமலை சீற்றத்தால் உருவான இந்த தீவு கூட்டத்தில் நான்கு தீவுகள் உள்ளன.ஆனால் ஒரே ஒரு தீவில் மட்டுமே மக்கள் வசிகின்றனர். தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள இந்த தீவு கூட்டத்தின் மொத்த பரப்பளவு 47சதுர கிலோமீட்டர்.
தீவின் மொத்த பரபளவில் 5 சதுர கிலோமீட்டர் பகுதியிலேயே மக்கள் வசிக்கின்றனர். பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள இந்த தீவில்  50 மக்கள் வசிகின்றனர்.தீவின் தலைவராக தீவு மேயர் உள்ளார்.
பொருளாதாரம் மரக்கறி மற்றும் பழவகைகள் பயிரிடபடுகின்றன.சிறிய அளவில் மீன்பிடி மற்றும் கைப்பணி பொருட்கள் உற்பத்தி என்பன உள்ளன.விமான நிலையமோ,துறை முகமோ இல்லாத இந்த தீவில் ஏற்றுமதி,இறகுமதி என்பன எட்டாக்கனியாகவே உள்ளது. தீவை தாண்டி செல்லும் கப்பல்களில் இவர்கள் தங்களின் உற்பத்திகளை படகுகளில் ஏற்றி சென்று விற்பனை செய்கின்றனர்.
உலகில் மிகவும் தனிமை படுத்தபட்ட தீவாக இருந்தாலும் இங்கு தொலைபேசி,இணையம் மற்றும் செய்மதி தொலைகாட்சிகள் இருப்பது வியப்பிற்குரியதாகும். இத்தீவின் பாதுகாப்பிற்கென இரண்டு பொலீசார் நான்கு மாத சுழற்சி முறையில் கடமை புரிகின்றானர்.
நான்காவது இடம் உள்ள நாடு ஜிப்ரால்டர் ஆகும்.6.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த நாடு lberian வளைகுடாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது.மேற்கு எல்லையில் ஸ்பெயின் உள்ளது. பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள இந்த நாடு இரண்டாம் உலக போரின் போது பிரித்தானிய படைகளின் முக்கிய தளமாக விளங்கியது.
சுமார் 30,000 மக்கள் வசிக்கும் இந்தநாட்டின் பொருளாதாரம் சுற்றுலா பயணிகளிலேயே  தங்கியுள்ளது. இங்கு பொருட்கள் சேவைகளுக்கு வரி அறவிடபடுவதில்லை.வங்கிகள் என்று பார்த்தல் பல பிரித்தானிய மற்றும் சர்வதேச வங்கிகள் இயங்குகின்றன.பெரும்பாலன  கத்தோலிகர்கள்,   சிறுபான்மை  இஸ்லாம் , ஜூதர்கள் உள்ளனர்.
மொழி ஆங்கிலம் உள்ளவேளை ஸ்பநிஷும் பாவனையில் உள்ளது.இங்கு சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கபடுகின்றன.பிரித்தானிய கடவுசீட்டு வைத்திருப்போர் இங்கு தங்கும் காலபகுதியில் அவர்களுக்கும் வைத்திய சேவை இலவசமாக வழங்கபடுகின்றது.  இந்த நாட்டின் பாதுகாப்பு பிரித்தானியாவின் பொறுப்பாகும்..
ஐந்தாவது இடம் சான் மரீனோ 24 சதுர கிலோமீற்றர் பரப்பளவு இத்தாலியின் வடக்கு பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. சுமார் 29,000 மக்கள் வசிக்கின்றனர். ஐரோப்பாவின் மிகப் பழைய நகரம் இது என்பதுடன் 4 நூற்றாண்டு கால வரலாறுகளையும் கொண்டுள்ளது.
ஆறாவது இடம் லிச்ரென்ஸ்ரன் 62 சதுர கிலோ மீற்றர் 34,000 மக்களை உள்ளடக்கியது சுவிஸ்லாந்து , அஸ்ரியாவின் அல்வின்  மலைத்தொடர்களை நெருங்கியது.
ஏழாவது மார்சல் தீவுகள் 70 சதுர கிலோமீற்றர் 58,000 குடி மக்களை உள்ளடக்கியுள்ளது. 1986 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவத்தின் கீழிருந்து சுதந்திரம் பெற்றது. தனி ஒரு நாடாக  ஐக்கிய நாடுகளின் அங்கிகாரத்தினையும் பெற்றுள்ளது.
எட்டாவது சைன் கிற்ஸ் அண்ட் நேவி  104 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு 39,000 குடிமக்களையும் கொண்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.  கடற் படை வீரர்களை மட்டுமே பாதுகாப்பு  பாதுகாப்பு தளமாக கொண்டுள்ளது.
ஒன்பதாவது இடம் சிஷெல்ஸ்  107 சதுர கிலோ மீற்றர் 81,000 குடி மக்களை கொண்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.
பத்தாவது இடம் மாலை தீவு  115 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. 340,000 மக்களை உள்ளடக்கியுள்ளது. 1965 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.
மால்ற்றா 122 சதுர கிலோ மீற்றர் 400,000 குடிமக்களை உள்ளடக்கியது 1946 ஆம் ஆண்டு பிரித்தானியாவின்  காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது. 1979 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தினர் முற்றாக தமது படையை வாபஸ் பெற்றனர்.
கிரேனேடா  133 சதுர கிலோ மீற்றர் 90,000 குடிமக்களை உள்ளடக்கியது 1974 ஆம் ஆண்டு பிரித்தானியாவின்  காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.வெனிசூலாவுக்கு அருகாமையிலும் ,கரீபியன் தீவுகளுக்கு அருகாமையிலும் உள்ளது.
துவாலு 9 சதுர கிலோமீற்றர் பரப்பளவு  1968 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 12,000 மக்களை உள்ளடக்கியுள்ளது.
பார்படாஸ் 166 சதுர கிலோமீற்றர் 280,000 குடிமக்களை உள்ளடக்கியது 1966 ஆம் ஆண்டு பிரித்தானியாவின்  காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.
பலோ 191 சதுர கிலோமீற்றர்  200-20,000 குடிமக்களை உள்ளடக்கியது  1994 ஆம் ஆண்டு பிரித்தானியாவின்  காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.
இவற்றை விடவும் மேலும் பல தீவுகள் நகரங்கள் தம்மை தனி நாடுகளாக அடையாளங்காட்டி ஐக்கிய நாடுகளின் அங்கிகாரத்தையும் பெற்றுள்ளன.சுருங்கக் கூறின்  நேற்று முளைத்த காளான்கள் எனலாம்.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: