ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைவிடயத்தில் இலங்கை நிலவரம்

24 06 2010

This slideshow requires JavaScript.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநட்டின் போதே அமைச்சர் இந்தக்கருத்துக்களை தெரிவித்தார்.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகை நீடிப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரால் இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழு என்பவை தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதற்காகவே இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு கருத்துவெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர் கத்தரின் அஸ்டன் நான்கு நாட்களுக்கு முன்பாக தமக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தாகவும் அதில் ஆறுமாத காலத்திற்கு ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச்சலுகையை நீடிப்பதானால் இலங்கை அரசாங்கம் 15நிபந்தனைகளை இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ம்திகதிக்குள் பூர்த்திசெய்யுமென்ற எழுத்துமூல உறுதிமொழியை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இதுதொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் இந்த நிபந்தனைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டார் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் இதில் ஒருநிபந்தனையாகும் இது நாட்டின் உள்விவகாரத்துடன் தொடர்புடையது வெளிநாட்டு அரசாங்கம் இதுவிடயத்தில் தீhமானிக்க முடியாது.

இதற்கும் வர்த்தக உடன்படிக்கைக்கும் எவ்வித தொட்ர்பும் இருப்பதாக நாம் காணவில்லை இதனைத்தவிர 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர காலச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்பது மற்றுமொரு நிபந்தனையாகும் கடந்த மே மாதம் 05ம்திகதியன்ற அவசர காலச்சட்டத்தின் நூற்றுக்கு 70வீதமான விதிகளை அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களும் இன்றியே சுயமாக நீக்கியிருந்தது மக்களின் ஆணைபெற்ற அரசாங்கமே மக்களின் பாதுகாப்பு தொடர்புடைய விடயத்தில் தீர்மானம் மேற்கொள்ளமுடியும் இதனை விடுத்து வெளிச்சக்திகள் தீர்மானிக்க முடியாது.

இதேபோன்று பயங்கர வாத தடைச்சட்டத்தையும் முற்றாக நீக்க வேண்டும் என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும் இதனையும் ஏற்கமுடியாது இப்படியாக பதினைந்து நிபந்தனைகளும் நாட்டின் இறைமைக்கும் சுயாதீன ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடியவையாகும் இவற்றை நடைமுறைப்படுத்துவதானால் அரசியல் யாப்பை முற்றாக திருத்தியமைக்கவேண்டும் நாட்டிலுள்ள சட்டவரைபுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்களை இரத்துச்செய்யவேண்டி ஏற்படும் இப்படியாக நாட்டின் நலனிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் சுயகௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் நிபந்தனைகளுக்கு அடிபணியமுடியாது இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக்கையிருப்பு 6000மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகையினால் இலங்கைக்கு ஆக மொத்தாக கிடைக்க கூடியது 150மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இலங்கைக்கு ஆடைக்கோட்டா முறைமை அற்றுப்போனபோது ஆடைக்கைத்தொழிலுக்கு எதிர்காலம் இல்லை என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது ஆனாலும் படைப்பாற்றலில் தனித்துவமான எமது உற்பத்தியாளர்கள் தற்போது முன்னரைவிடவும் அதிலே சிறப்பாக செயற்படுகின்றனர்.

ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைபப்பாடு என்ன என ஊடகவியலாளர் வினவியபோது நாம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கர்க நியாயமான வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினோhம் இதற்காக இரு உயர்மட்டத்தூதுக்குழுக்களும் பிரசல்ஸ் அனுப்ப்ப்ட்டன ஆனால் நிபந்தனைகளின் அடிப்படையில் பேசமுடியாது ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சரின் கடிதத்திற்கு பதிலளிக்கபபோவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: