எயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர்

2 12 2010

ஆண்டு தோறும் ஒவ்வொரு தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற எயிட்ஸ் தினத்தின் இவ்வருட தொனிப்பொருள். தொனிப்பொருள் சகல சேவைகளையும் சகலருக்கும் வழங்குவோம், மனித உரிமைகளை மதிப்போம் என்பதாகும்.
இலங்கையில் பாலுறுவு நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட அமைப்பின் தகவல்களின் படி 2009ஆம் ஆண்டு மாகாண ரீதியாக எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் மேல் மாகாணம் 57, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 8, தென்மாகாணம் 6, வடமாகாணம் 4, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களில் 3, ஊவா மாகாணம் 1, அறியப்படாதவர்களாக 7, காணப்பட்டதாக அறிக்கையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர். 2009 ஆம் ஆண்டின் தகவல்களின் படி 35 தொடக்கம் 39 வயதுப்பிரிவினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவில் 130 ஆண்களும் 103 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30-34 வயதுப்பிரிவில் 121 ஆண்களும் 108 பெண்களும், 40-44 வயதுப்பிரிவில் 117 ஆண்களும் 70 பெண்களும் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
50 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 77 ஆண்களும் 37 பெண்களும் எயிட்ஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதுவம் குறிப்பிடத்தக்கது. 2009 ம் ஆண்டு இலங்கையில் 707 ஆண்களும் 489 பெண்களும் அடங்கலாக மொத்தமாக 1196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு முதற்காலாண்டில் 3 பேரும் இரண்டாம் காலாண்டில் 3 பேரும் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் முறையே 5,5 பேருமாக மொத்தம் 16 பேர் எயிட்ஸ் நோயினால் மரணமடைந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டில் முதலாம் இரண்டாம் மூன்றாம் காலாண்டுகளில் முறையே 6 ,4, 4 என மொத்தமாக 14 பேர் இறந்துள்ளனர்.
எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 216 என அறிக்கைகள் தெரிவிக்கின்ற அதேவேளை 2009ஆம் ஆண்டு 397374 பேர் எச் ஐ வி தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வவுனியா மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 1052 பேர் பரிசோதணைக்குட்படுத்தபட்ட நிலையில் ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டு இறந்துள்ளார்.இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு 555 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ள அதேவேளை நோய் தொற்றுள்ளவர்களாக இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.

கடந்த காலங்களில் இலங்கையில் வயது வந்தோர் பாதிக்கப்பட்டுள்ள வீதம் 0.1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது என்றாலும் அதிகரித்து வரும் நாகரீக வாழ்க்கை முறைக்கு ஏற்ப எயிட்ஸ் நோய்த்தாக்கமும் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களின் எல்லைகளையும் தொட்டுச்சென்றுள்ளது. இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிக்கப்பட்டும் , சுமார் 200 பேர் வரை மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பொதுவான கொள்கைத் திட்டமொன்று இல்லாத போதிலும் இலங்கையில் 2002-2006 காலப்பகுதியில் எச்.ஐ.வி க்கான தந்திரோபாயத் திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. எச்.ஐ.வி தந்தரோபாயத் திட்டம் தடுப்புமுறை, நலன்பேணல், நோயாளர்களை அடையாளம் காணுதல போன்ற 3 தொழில் நுட்பப்பிரிவுகளை கொண்டு செயற்பட்டு வந்துள்ளதுடன் சுகாதார அமைச்சு காலத்தின் தேவைக்கேற்ப சுமார் 3 வருடங்களுக்கொரு முறை தனது தந்திரோபாயத் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்று உள்ள சுமார் 89உறுப்பினர்கள் இணைந்து லங்கா பிளஸ் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதுடன். அவ்அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடல் , உளவியல் செயற்பாடுகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகிலாவிய ரீதியில் மிகஉருக்கமாக அனுஸ்டிக்கப்படும் எயிட்ஸ் தினம் . தேசம் கடந்து நாடு கடந்து சுமார் 33 மில்லியன் மக்களை ஆட்கொண்டுள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு புதிதாக 2.6 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில் 1.8 மில்லியன் மக்கள் இது வரை உயிரிழந்துள்ளனர்.
2004ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோயினால் உயிரிளந்தவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியன் ஆகும். இன்றைய கால கட்டங்களை பொருத்த வரை எயிட்ஸ் நோய் பரவும் வீதம் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்துள்ளது அல்லது அவற்றுக்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனலாம்.

கடந்த வருடங்களை விடவும் குறிப்பாக தென் ஆபிரிக்கா, சம்பியா, சிம்பாவே மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எயிட்ஸ் நோய் பரவும் எண்ணி;க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .  உலகளாவிய ரீதியில் எயிட்ஸ் நோயளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆய்வுகளும்
எயிட்ஸ் நோய் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்றதாய் ஆக்கும் மிக வேகமான நோய்க் கருவி என்பது அனைவரும் அறிந்ததே.
மிக நுண்மையான எச்.ஐ.வி வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையூம் வரை பெருகுவதில்லை. எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1982ஆம் ஆண்டு இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர்  இறந்துள்ளதுடன்   சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

உடலில் உள்ளபடர் ஜவ்வுப் படலமோ அல்லது இரத்தமோ, நோய் தொற்றிய இரத்தம், விந்து, யோனிமடற் கழிவு,முன்விந்துத்திரவம் அல்லது தாய்ப்பால் போன்ற உடல்திரவங்களோடு நேரடி தொடர்பு கொள்ளும்போது ஹெச்ஐவி வைரஸ் தொற்றுகிறது.

2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்.  330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது.
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆபிரிக்காவில் எச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டு வந்தாலும் இந்நோய் வெகு வேகமாக பரவும் தன்மைகொண்டதனால்; அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதே சாலச்சிறந்தது.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: