இலங்கையில் தொடரும் இயற்கை மர்மங்கள்! காரணம் என்ன?

6 12 2010

மட்டக்களப்பு கல்லடி வாவியில் கடந்த புதன் கிழமை முதல் பாம்புகளின் இலவச கண்காட்சி இடம் பெற்று வருகிறது. சுமார் மூன்று நான்கு அடி நீளமான வெள்ளை நிறத்தைக் கொண்ட இந்த பாம்புகள் ஆயிரக்கணக்கில் நீரின் மேற்பரப்பில் தமது நடனங்களை நிகழ்த்துகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் போதும் இதே விதமான பாம்புகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மத்தியில் அதே கல்லடி வாவியில் தென்பட்டது என்றாலும்  அது விபரிதமாக மக்கள் மத்தியில் சலனத்தை உண்டு பண்ணவில்லை. ஆனால் தற்போது மீண்டும் அதே விதமான ஒரு காட்சியை மக்கள் தமது கண்முன்  காணுகையில் சுனாமிப் பேரலையின்  வருகைக்கான அறிகுறி என மக்கள் மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமிப் பேரலையால் இலங்கையில் சுமார் 31,187  மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதுடன் 23,109 மேற்பட்ட மக்கள் உடமைகள், உறவுகளை இழந்து அகதிகளாகவும் அங்கவீனர்களாகவும் ஆக்கப்பட்டமையுடன் 4,280பேர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த பாம்புகளின் தோற்றத்தினால் எந்தவித சுனாமி ஆபத்தும் ஏற்படப்போவதில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்த மீனவர் ஒருவர் இவ்வாறான பாம்புகள் கடந்த பல காலமாக மார்கழி மாதங்களில் தென்பட்டுவந்ததாகவும் இது ஒருவகை விலாங்கு மீன் இன வகையை சேர்ந்தது எனவும் தற்போது இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருவது தொடர்பில் தனக்கு வியப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் மற்றும் நாடளாவிய ரீதியில் பெய்து வரும் அடை மழை என்பன கரையோரப்பிரதேச மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா கட்டையாற்றில் பெரும் எண்ணிக்கையான வெள்ளைநிற பாம்புகள் அண்மைய நாட்களில் தென்படுவதாகவும் இப்பாம்புகள அதி கூடிய நச்சுத்தன்மை கொண்டது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தவிர மீள்குடியேறிவரும் மக்கள் பிரதேசமான மன்னார் முல்லைத்தீவு பிரதேசங்களில் பாட்டு யானைகளின் ஆக்கிரமிப்பும் தொடர்நத வண்ணம் உள்ளன.

ஆக மொத்தத்தில் வன ஜீவராசிகள் உள்ளிட்ட அத்தனை விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் என அனைத்தும் தமது இருப்பிடங்களை விட்டு மக்கள் வாழும் பிரதேசங்களுல் திடிர் சுற்றுலா மேற்கொண்டுள்ளமையானது மக்களின் சாதாரண வாழ்க்கையை சீர்குழைக்கும் செயற்பாடாகவே உள்ளது.
3 தசாப்த கால யுத்தப் போராட்டங்களின் பின்னர் இம்முறை நத்தாரை , புதுவருடத்தை வெகு சிறப்பாக கொண்டாட எண்ணியுள்ள வடகிழக்கு மக்களின் வாழ்வாதர தொழிலுக்கு நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இடையுறாக இருப்பது மட்டுமல்லாமல் இவ்வாறான செயற்பாடுகளும் மனதில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுர பேரலையின் இழப்புக்களை மீண்டும் புடம்ட்டு காட்டுவது போல் உள்ளது எனலாம்.

இதேவேளை சுனாமி ஆபத்தை அறிவிக்கும் கருவிக்கு மிதவை கருவி என பெயர் வழங்கப்பட்டுள்ளது. கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதையும் அவற்றில் உள்ள பிரத்தியேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வௌ;வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும் என்பதும் அனைவரும் நினைவில் கொண்டு வரும்முன் காப்பதே மேல்

 

 

Advertisements

Actions

Information

One response

6 12 2010
vije

2004 சுனாமி வந்தபோதும் இவ்வாறு மீன்கள் உள்ளிட்ட விலங்கிணங்கள் முன்னறிவித்தல் வழங்கின எனினும் இம்முறை பாம்பு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: