‘தன் வினை தன்னைச் சுடும்’ யு.எஸ்.ஏ உள்ளிட்ட அனைத்துலக நாடுகளினதும் அடி மடியில் கை வைத்திருக்கும் விக்கிலீக்ஸ் இணையத்தளம்

10 12 2010

21ஆம் நூற்றாண்டின் அதிவேக தகவல் பரிமாற்ற ஊடகம் இணையத்தளம். எனினும் இவ்விணையத்தளங்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கை தன்மையுடன் செயற்படுகின்றது என்பது ஒரு புற மிருக்க அவை எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பது தொடர்பில் அக்கறை செலுத்துவதற்கான காரணத்தை விசில் ஊதும் இணையத்தளம் மக்கள் மத்தியில் ஏறபடுத்தியுள்ளது.

உலகின் அனைத்து ஆதிக்கங்களையும் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க முயற்சிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் இராஜாங்க பாதுகாப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளதுடன் பல நாடுகளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
விசில் ஊதும் இணையத்தளம் என மேற்குல ஊடகங்களால் வர்ணிக்கப்படும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேன்ஜ் குறிப்பிட்ட சில நாட்களில் லண்டனில கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதையுடைய அவுஸ்திரேலியப் பிரஜையான இவர் மீது ஏற்கனவே சுவீடனை சேர்ந்த இரு இளம் பெண்கள்   பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் வழக்குத்தாகக்கல் செய்திருந்தனர் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இணையத்தள சர்ச்சையினை தொடர்ந்து பன்னாட்டு காவல்துறையான இன்ரபோல் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், லண்டனில் கைது செய்யப்பட்ட ஜீலியன் வெஸ்ற்மினிஸ்ரர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இணையத்தள நிறுவனரின் கைது தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என வர்ணித்துள்ள அதேவேளை, மேலும் பல நாடுகளின் இரகசிய ஆவணங்கள் எம்மிடம் இருக்கின்றது எனவும் அவற்றை வெளியிடுவதிலிருந்து எமது இணையம் ஒருக்காலும் பின் வாங்காது எனவும் தெரிவித்துள்ளார்.


விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கான சேவர் சேவையை வழங்குவதற்கு பல அமெரிக்க நிறுவனங்கள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், அது தற்பொழுது சுவிஸ் நாட்டில் தளம் கொண்டுள்ள சேவர் மூலம் இயக்கப்பட்டு வருவதுடன், பல தடவைகள் சைபர் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றமை வேதனைக்குரியதே

தவிர இவ்விணையத்தளம் உலக வல்லரசு நாடுகள் மாத்திரமல்லாது எமது நாட்டின் சார்வாதிகார தலைவர்களின் அடி மடியிலும் தொட்டுச்சென்றுள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இலங்ழைக தொடர்பில் 3 ஆவணங்கள் உள்ளங்கியுள்ளது.

1. விடுதலைப் புலிகளுடனான போரில் இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதில் வெளியாகியிருக்கின்றது.

2. அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டர்னீசுடன்; தமிழ் அ6ரசியல் தலைவர்கள் நடத்தியுள்ள பேச்சுக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

3. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானைப் பிரதான தளமாகக் கொண்டியங்கும் லக்ஷல் இ – தொய்பா அமைப்பின் பயிற்சி முகாம்கள் இலங்கையில் செயற்படுவதாக அமெரிக்க தூதுவர் அனுப்பிவைத்துள்ள தகவல்கள்.

சர்வதேச ரீதியாக வல்லரசு நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்துவரும் ‘விக்கிலீக்ஸ்’ இணையத்தளத்தின் வசமுள்ள 251,287 அமெரிக்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களில் 3000 இற்கும் அதிகமானவை இலங்கையுடன் தெடர்பானவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுமே பிரதான காரணங்கள் என விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கும் ஆவனங்கள் தொடர்பில் அமெரிக்கா தர்மசங்கடமான நிலைக்குள்ளாகியுள்ளது.

வாஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்காவின் தூதரகங்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட சுமார் 2,50,000 இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போரின் பின்னர் 2009 ஜுலையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட காலப்பகுதியில் இரகசியச் செய்திகளை அமெரிக்க தூதுவர் பற்றீசியர் வாஷிங்டனுக்கு முதல் முறையாக அனுப்பிவைத்துள்ளார். ஏன்பது தொடர்பிலும்ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விக்கிலீஸ் இணையத்தளத்தினால் வெகு லாபகமாக கசிந்து வெளிவரும் தகவல்களை மறுப்பதற்கு தூதுவர் பற்றீசியா முன்வரவில்லை. என்பதுடன் நிறுவன உரிமையாளர் மீதான கைதும் கசிந்துள்ள தகவல்கள் உண்மையானவை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றது.

ரஸ்யா அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் தமது பாதுகாப்பு தகவல்களை பேணிப் பாதுகாக்க அமெரிக்காவினால் கண்டு பிடிக்கப்பட்ட இணையத்தள அதாவது சேவர் முறைகள் தற்போது அமெரிக்காவுக்கே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள்மை வேதனை தான்

விக்கிலீஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணங்களின் நம்பகத்தன்மை எதுவாக இருந்தாலும் ஒரு நாட்டை சமூகத்தை என்று சீரழிக்கும் நடவடிக்கைகளில் எந்தவொரு தனிமனிதனும் சிந்தித்து செயற்படுவது தான் இன்றை காலகட்டத்தின் தேவையுமாகும்.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: