‘தன் வினை தன்னைச் சுடும்’ யு.எஸ்.ஏ உள்ளிட்ட அனைத்துலக நாடுகளினதும் அடி மடியில் கை வைத்திருக்கும் விக்கிலீக்ஸ் இணையத்தளம்

10 12 2010

21ஆம் நூற்றாண்டின் அதிவேக தகவல் பரிமாற்ற ஊடகம் இணையத்தளம். எனினும் இவ்விணையத்தளங்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கை தன்மையுடன் செயற்படுகின்றது என்பது ஒரு புற மிருக்க அவை எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பது தொடர்பில் அக்கறை செலுத்துவதற்கான காரணத்தை விசில் ஊதும் இணையத்தளம் மக்கள் மத்தியில் ஏறபடுத்தியுள்ளது.

உலகின் அனைத்து ஆதிக்கங்களையும் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க முயற்சிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் இராஜாங்க பாதுகாப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளதுடன் பல நாடுகளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
விசில் ஊதும் இணையத்தளம் என மேற்குல ஊடகங்களால் வர்ணிக்கப்படும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேன்ஜ் குறிப்பிட்ட சில நாட்களில் லண்டனில கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதையுடைய அவுஸ்திரேலியப் பிரஜையான இவர் மீது ஏற்கனவே சுவீடனை சேர்ந்த இரு இளம் பெண்கள்   பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் வழக்குத்தாகக்கல் செய்திருந்தனர் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இணையத்தள சர்ச்சையினை தொடர்ந்து பன்னாட்டு காவல்துறையான இன்ரபோல் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், லண்டனில் கைது செய்யப்பட்ட ஜீலியன் வெஸ்ற்மினிஸ்ரர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இணையத்தள நிறுவனரின் கைது தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என வர்ணித்துள்ள அதேவேளை, மேலும் பல நாடுகளின் இரகசிய ஆவணங்கள் எம்மிடம் இருக்கின்றது எனவும் அவற்றை வெளியிடுவதிலிருந்து எமது இணையம் ஒருக்காலும் பின் வாங்காது எனவும் தெரிவித்துள்ளார்.


விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கான சேவர் சேவையை வழங்குவதற்கு பல அமெரிக்க நிறுவனங்கள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், அது தற்பொழுது சுவிஸ் நாட்டில் தளம் கொண்டுள்ள சேவர் மூலம் இயக்கப்பட்டு வருவதுடன், பல தடவைகள் சைபர் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றமை வேதனைக்குரியதே

தவிர இவ்விணையத்தளம் உலக வல்லரசு நாடுகள் மாத்திரமல்லாது எமது நாட்டின் சார்வாதிகார தலைவர்களின் அடி மடியிலும் தொட்டுச்சென்றுள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இலங்ழைக தொடர்பில் 3 ஆவணங்கள் உள்ளங்கியுள்ளது.

1. விடுதலைப் புலிகளுடனான போரில் இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதில் வெளியாகியிருக்கின்றது.

2. அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டர்னீசுடன்; தமிழ் அ6ரசியல் தலைவர்கள் நடத்தியுள்ள பேச்சுக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

3. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானைப் பிரதான தளமாகக் கொண்டியங்கும் லக்ஷல் இ – தொய்பா அமைப்பின் பயிற்சி முகாம்கள் இலங்கையில் செயற்படுவதாக அமெரிக்க தூதுவர் அனுப்பிவைத்துள்ள தகவல்கள்.

சர்வதேச ரீதியாக வல்லரசு நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்துவரும் ‘விக்கிலீக்ஸ்’ இணையத்தளத்தின் வசமுள்ள 251,287 அமெரிக்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களில் 3000 இற்கும் அதிகமானவை இலங்கையுடன் தெடர்பானவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுமே பிரதான காரணங்கள் என விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கும் ஆவனங்கள் தொடர்பில் அமெரிக்கா தர்மசங்கடமான நிலைக்குள்ளாகியுள்ளது.

வாஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்காவின் தூதரகங்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட சுமார் 2,50,000 இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போரின் பின்னர் 2009 ஜுலையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட காலப்பகுதியில் இரகசியச் செய்திகளை அமெரிக்க தூதுவர் பற்றீசியர் வாஷிங்டனுக்கு முதல் முறையாக அனுப்பிவைத்துள்ளார். ஏன்பது தொடர்பிலும்ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விக்கிலீஸ் இணையத்தளத்தினால் வெகு லாபகமாக கசிந்து வெளிவரும் தகவல்களை மறுப்பதற்கு தூதுவர் பற்றீசியா முன்வரவில்லை. என்பதுடன் நிறுவன உரிமையாளர் மீதான கைதும் கசிந்துள்ள தகவல்கள் உண்மையானவை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றது.

ரஸ்யா அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் தமது பாதுகாப்பு தகவல்களை பேணிப் பாதுகாக்க அமெரிக்காவினால் கண்டு பிடிக்கப்பட்ட இணையத்தள அதாவது சேவர் முறைகள் தற்போது அமெரிக்காவுக்கே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள்மை வேதனை தான்

விக்கிலீஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணங்களின் நம்பகத்தன்மை எதுவாக இருந்தாலும் ஒரு நாட்டை சமூகத்தை என்று சீரழிக்கும் நடவடிக்கைகளில் எந்தவொரு தனிமனிதனும் சிந்தித்து செயற்படுவது தான் இன்றை காலகட்டத்தின் தேவையுமாகும்.

Advertisements
பிரபஞ்சத்தின் இன்றைய நிலையில் சூரியனுக்கும் அத்தாட்சி பத்திரங்கள் , விலை போவது பிரபஞ்சத்தில் உள்ளவைகள் மட்டுமல்ல பிரபஞ்சமும் தான்.

8 12 2010

சமாதி நிலை ஆத்மாத்த நிலை என்பது எம்மாவர்கள் மத்தியில் கொஞ்சமும் இல்லை என்றால் அது மிகையில்லை. ஏனெனில் வளர்ந்து வரும் இன்றைய நாகரீக உலகில் பலரும் தம்மை தாமே கவனிக்க  நேரமில்லை என்று குறை கூறுகிறார்கள்.

பணத்தின் மீதிருக்கும் மோகமும் அதிகரித்த வேலைப்பழுவும் மக்கள் தாம் நின்ற இடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க இடம் கொடுப்பதில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் தம்மை பாதுகாக்க பெற்றோர் நண்பர்கள் , உறவினர்கள் , குடும்பத்திற்கு வீடு , நமது வீட்டை பாதுகாக்க நாய் , தெருவை பாதுகாக்க சங்கம் , காவல் , நமது மாநிலத்தை பாதுகாக முதலமைச்சர் என்னையே அமைச்சர்கள் , நாடுக்கு பிரதமர்….. இவ்வாறு வளர்ந்து கொண்டே செல்லும் எமது காவலர்கள் இந்த சிறு பூமியில் எங்கோ ஓர் மூலையில் ஒரு அனுவாக வாழும் நமக்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே  செல்கின்றன என்றால் அது மிகையில்லை.

எமது பாதுகாப்பு என்பதையும் தாண்டி ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் இருக்கும் ஆசைகள் தான் எத்தனை அதிலும் அதிகம் நகைகள் பட்டுப்புடவைகள் என எதிர்பார்க்கும் பெண்களின் ஆசைகள் இன்று காலத்திற்கேற்ற நவீன முறையில் சிந்திக்க தொடங்கி விட்டன போலும்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன். இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார்.
தவிர அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார்.
இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10 சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் நம் முன்னோர்கள் எவற்றை யெல்லாம் இறைவன் என் கூறி வழிபட்டார்களோ அவை எல்லாம் இன்று மனிதன் தனக்கு உரிமையான சொத்து என்று கூறிவருகின்றான். அனைத்தும் சமாதி நிலையை அடைவதே ஞானம் என கூறுகின்ற நாமக்கு ஞானத்தை பெற கண் சிட்டும் நேரம் கூடத் தேவையி;ல்லை என்பது மூத்தோர் பொதுமொழி இதிலும் விஞ்ஞானத்திலிருந்து கூட ஞானம் பெறலாம் என்பது இளையோர் வழி மொழி.

பூமியின் பரப்பளவு (510,066,000 ளங மஅ) , பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன் சுரியனை விட பல பல மடங்கு பெரியது நட்சத்திரம்  எவ்வுளவு நட்சத்திரங்கள் என்று இது வரையில் எவ்வித திட்டவட்டமான கணக்கீடுகளும் இல்லை. நம் பூமியை போலவே பல ஆயிரம் கிரகங்களும் , சூரியன்களும் பால் வெளியில் உள்ளன. பல கோடி ஒழி ஆண்டுகள் கடந்து இன்னும், பிரபஞ்சத்தின் அளவு கோள் நீள்கிறது எனக்கூறுகிறது விஞ்ஞானம்.

இவ்வுளவு பெரிய பிரபஞ்சத்தில்.இதை படிக்கும் போது வாழ்கையே ஒன்றும் இல்லை என்று ஒரு எண்ணம் வருகின்றது. ஏன்றாலும் மிலேனிய யுகத்தில் எல்லாம் பணமாகவே வாழும் மனிதன் அதற்கும் விலை வைத்துவிட்டான்.

தவிர சூரியன் என்பது நெருப்பு கோளாகும். இதை நாம் கிரகம் என்று அழைக்கிறோம். ஆனால் சிலர் இதனை நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். நம் முன்னோர்கள் கிரகம் என்றே சூரியனை அழைக்க வேண்டும் என்பது வழக்காறு இந்த கிரகத்தை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது.

சூரியன் வான்வெளியில் தன்னைத் தானே சுற்றி வருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமாராக 9,20,30,000 முஆ ஆகும். சூரியன் தன்னைத்தானே ஒரு தடவை சுற்றி வர ஒரு மாதம் காலம் ஆகிறது. 12 ராசியையும் சுற்றி வர 365 நாள் 15 நாழிகை 32 விநாடிகள் ஆகிறது. இது தான் நாம் ஒரு வருடம் என்கிறோம். இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் தங்கி இருப்பார். இவர் அடுத்த ராசிக்கு செல்லும் போது அடுத்த மாதம் பிறக்கும் என்றும் நம் முன்னோர்கள் அதனை உயர்தினைப் பொருளாக்கி (அவர்) காலத்தை கணிக்கும் முறையினையும் எழுதாச்சட்டமாக புகுத்தி விட்டனர் இதுவும் எமது வழக்காறுகளில் ஒன்றாகும்.

சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரே உடம்புக்கு உயிர் தருபவர். சூரியனை வைத்தே லக்கினம் கணக்கிடப்படும். சூரியனை வைத்து தகப்பனார்,உடல்பலம்,ஆண்மை,பரிசுத்தம்,அரசியல் தொடர்பு தகப்பனார் உடன் பிறந்தவர்கள், புகழ் அனைத்தும் பார்க்க வேண்டும்.இவர் ஐந்தில் வந்து அமரும் போது புத்திர தோஷத்தை தருகிறார். ஏழில் வந்து அமரும் போது களத்திர தோஷத்தை தருகிறார் என்றெல்லாம் இந்துக்கள் தமது வாழ்நாளை நம்பிக்கையுடன் கழித்து வருகின்றனர்.
இதிலும் சூரியனுக்கும் ஏனையவற்றுக்குமிடையிலான தொடர்பு என்பதும் கணக்கிடப்பட்ட ஒரு விடயம் ஆகும்.

நிறம் – சிவப்பு

மலர் – தாமரை

தேசம் – கலிங்கம்

தானியம் – கோதுமை

வாகனம் – தேர்

நட்பு கிரகம் – சந்திரன்.வியாழன்.செவ்வாய்

பகை கிரகம் – சுக்கிரன்.சனி.ராகு.

கேதுநட்சத்திரம் – கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்

இனம் – ஆண்

நீசம் – துலாம்


உச்சம் – மேஷம்

கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி, போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பதை எம்மவர்கள் மனங்களிலே தெய்வமாக வழிபாடு செய்கின்ற சூரியனையும் விலைபேசும் எம் சமூகத்தின் சிந்தனை தான் என்ன?

பழைய நினைவுகளுடனும் புதிய தகவல்களுடனும் புதிய யுகம் படைப்பவை இலக்கியம்

6 12 2010

ந்த மொழியாக இருந்தாலும் வாசிப்பு தான் ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பது பொது மொழி என்றாலும் இதனை எம்மவர்கள் எத்தனை பேர் கடைப்பிடிக்கின்றார்கள் என்றால் புதிய நகைச்சுவை தான்.

வளர்ந்து வரும் நவீன யுகத்திற்கும் ஆடம்பரவ வாழ்க்ககைக்கும் மத்தியில் மனிதன் தன்னையே மறந்து திரிகின்றான் என்றால் மிகையில்லை. எமது இளம் சமூதாயத்தினர் மத்தியில் வாசிப்பு என்பது ஒரு வித கசப்பான விடயம் என்றாலும் அதனையும் அவர்கள் மத்தியில் பிரகாசிக்க செய்வதில் ஒரு சில பொதுவான நூல்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன எனலாம். தனது அழகின் மூலம் வளர்ந்து வரும் இளம் சமூதாயத்தினர் மனங்களில் மத்தியில் தடம் பதித்துள்ளது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (Encyclopedia Britannica) உலகிலேயே மிகப் பழைய ஆங்கில மொழி பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும்.

இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைகுரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் என உலக வாழ் மக்களினால் பெரிதும் நம்பப்படுகின்றன.

இது Scottish enlightenment இனுடைய ஒரு தயாரிப்பாகும். இக்களஞ்சிய சாலை எடின்பரோவில் அடம் (Adam) மற்றும் சார்லஸ் பிளாக் (Charles Black)) என்பவர்களினால் 18ஆம் நூற்றாண்டு தொடக்கம்

பிரெஞ்சு Encyclopedie போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன.

1870 களில், இதன் 19ஆம், 20ஆம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு ஸ்கொட்லாந்திலிருந்து இலண்டனுக்கு மாற்றப்பட்டு த டைம்ஸ் என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது.

11 ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, இங்கிலாந்திலேயே, கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. 11ஆம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய வியாபாரச் சின்னமும், பதிப்புரிமையும் சியர்ஸ் ரோபக் (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், சிக்காகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்ளலாயிற்று.

தற்போதைய பதிப்பாளர்கள் என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்”

(Encyclopedia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது டீசவையnniஉய (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது. பிரித்தானிக்காவின் தற்போதைய பதிப்பு 4000 க்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இவர்களுள் பிரபல அறிஞர்களான மில்ட்டன் ஃப்ரீட்மன் (Milton Friedman)இ கார்ல் சாகன் (Carl Sagan) மற்றும் மைக்கேல் டிபேக்கே (Michael DeBakey) என்பவர்களும் அடங்குவர்.

35 வீதமான கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் திருத்தி எழுதப்பட்டுள்ளன.

தமிழ்ப் பதிப்பு

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற பெயரில் பிரிட்டானிக்கா கன்சைஸ் என்சைக்ளோபீடியா வின் தமிழ் மொழிபெயர்ப்பு மூன்று தொகுதிகளாக 3120 பக்கங்களுடன் 28,000 கட்டுரைகளுடனும் 2400 புகைப்படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள், வரைபடங்களுடனும் விகடன் நிறுவனம் சென்னையில் வெளியிட்டுள்ளது.

என்ன தான் எழுத்தாளன் சமுதாயத்தால் ஏளனமாக பார்க்கப்பட்டாலும் அவன் தன் முயற்சியில் ஒரு போதும் ஓய்ந்ததாக தெரியவில்லை காரணம் அது அவனுடைய தனிப்பட்ட உள்ளக்குமுறல்களையும் சமூதாயப் பார்வைகளையும் தொட்டச் செல்வதால் அவன் தனது சாத்வீகப் போராட்டங்களில் என்றும் ஓய்நததாக தெரியவில்லை.

இலக்கியங்கள் காலத்தை காட்டும் கண்ணாடிகள் என்போம். அக்காண்ணாடிகள் வழியே காலம் மட்டுமல்லாமல் எழுத்தாளனுடைய எண்ணங்களும் அவன் சார்ந்த சமூதாய சீர்திருத்தங்களும் மக்கள் மத்தியில் வெகுவாக மாற்றங்களை எற்படுத்தி தான் வருக்கின்றன.

மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் என்ன தான் குறைந்து கொண்டு செல்கின்றது என்ற பொதுவான கருத்து நிலவினாலும் காலம் செல்ல செல்ல ஒரு மனிதனுக்கு வாசிப்பு மட்டும் தான் தோழன் என்ற நிலைக்கு ஒவ்வொரு மனிதர்களும் தள்ளப்படுகின்றனர் என்பது அனைவரும் முகம் சுழித்துக் கொண்டாவது ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

இலங்கையில் தொடரும் இயற்கை மர்மங்கள்! காரணம் என்ன?

6 12 2010

மட்டக்களப்பு கல்லடி வாவியில் கடந்த புதன் கிழமை முதல் பாம்புகளின் இலவச கண்காட்சி இடம் பெற்று வருகிறது. சுமார் மூன்று நான்கு அடி நீளமான வெள்ளை நிறத்தைக் கொண்ட இந்த பாம்புகள் ஆயிரக்கணக்கில் நீரின் மேற்பரப்பில் தமது நடனங்களை நிகழ்த்துகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் போதும் இதே விதமான பாம்புகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மத்தியில் அதே கல்லடி வாவியில் தென்பட்டது என்றாலும்  அது விபரிதமாக மக்கள் மத்தியில் சலனத்தை உண்டு பண்ணவில்லை. ஆனால் தற்போது மீண்டும் அதே விதமான ஒரு காட்சியை மக்கள் தமது கண்முன்  காணுகையில் சுனாமிப் பேரலையின்  வருகைக்கான அறிகுறி என மக்கள் மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமிப் பேரலையால் இலங்கையில் சுமார் 31,187  மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதுடன் 23,109 மேற்பட்ட மக்கள் உடமைகள், உறவுகளை இழந்து அகதிகளாகவும் அங்கவீனர்களாகவும் ஆக்கப்பட்டமையுடன் 4,280பேர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த பாம்புகளின் தோற்றத்தினால் எந்தவித சுனாமி ஆபத்தும் ஏற்படப்போவதில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்த மீனவர் ஒருவர் இவ்வாறான பாம்புகள் கடந்த பல காலமாக மார்கழி மாதங்களில் தென்பட்டுவந்ததாகவும் இது ஒருவகை விலாங்கு மீன் இன வகையை சேர்ந்தது எனவும் தற்போது இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருவது தொடர்பில் தனக்கு வியப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் மற்றும் நாடளாவிய ரீதியில் பெய்து வரும் அடை மழை என்பன கரையோரப்பிரதேச மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா கட்டையாற்றில் பெரும் எண்ணிக்கையான வெள்ளைநிற பாம்புகள் அண்மைய நாட்களில் தென்படுவதாகவும் இப்பாம்புகள அதி கூடிய நச்சுத்தன்மை கொண்டது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தவிர மீள்குடியேறிவரும் மக்கள் பிரதேசமான மன்னார் முல்லைத்தீவு பிரதேசங்களில் பாட்டு யானைகளின் ஆக்கிரமிப்பும் தொடர்நத வண்ணம் உள்ளன.

ஆக மொத்தத்தில் வன ஜீவராசிகள் உள்ளிட்ட அத்தனை விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் என அனைத்தும் தமது இருப்பிடங்களை விட்டு மக்கள் வாழும் பிரதேசங்களுல் திடிர் சுற்றுலா மேற்கொண்டுள்ளமையானது மக்களின் சாதாரண வாழ்க்கையை சீர்குழைக்கும் செயற்பாடாகவே உள்ளது.
3 தசாப்த கால யுத்தப் போராட்டங்களின் பின்னர் இம்முறை நத்தாரை , புதுவருடத்தை வெகு சிறப்பாக கொண்டாட எண்ணியுள்ள வடகிழக்கு மக்களின் வாழ்வாதர தொழிலுக்கு நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இடையுறாக இருப்பது மட்டுமல்லாமல் இவ்வாறான செயற்பாடுகளும் மனதில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுர பேரலையின் இழப்புக்களை மீண்டும் புடம்ட்டு காட்டுவது போல் உள்ளது எனலாம்.

இதேவேளை சுனாமி ஆபத்தை அறிவிக்கும் கருவிக்கு மிதவை கருவி என பெயர் வழங்கப்பட்டுள்ளது. கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதையும் அவற்றில் உள்ள பிரத்தியேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வௌ;வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும் என்பதும் அனைவரும் நினைவில் கொண்டு வரும்முன் காப்பதே மேல்

 

 

எயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர்

2 12 2010

ஆண்டு தோறும் ஒவ்வொரு தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற எயிட்ஸ் தினத்தின் இவ்வருட தொனிப்பொருள். தொனிப்பொருள் சகல சேவைகளையும் சகலருக்கும் வழங்குவோம், மனித உரிமைகளை மதிப்போம் என்பதாகும்.
இலங்கையில் பாலுறுவு நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட அமைப்பின் தகவல்களின் படி 2009ஆம் ஆண்டு மாகாண ரீதியாக எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் மேல் மாகாணம் 57, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 8, தென்மாகாணம் 6, வடமாகாணம் 4, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களில் 3, ஊவா மாகாணம் 1, அறியப்படாதவர்களாக 7, காணப்பட்டதாக அறிக்கையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர். 2009 ஆம் ஆண்டின் தகவல்களின் படி 35 தொடக்கம் 39 வயதுப்பிரிவினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவில் 130 ஆண்களும் 103 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30-34 வயதுப்பிரிவில் 121 ஆண்களும் 108 பெண்களும், 40-44 வயதுப்பிரிவில் 117 ஆண்களும் 70 பெண்களும் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
50 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 77 ஆண்களும் 37 பெண்களும் எயிட்ஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதுவம் குறிப்பிடத்தக்கது. 2009 ம் ஆண்டு இலங்கையில் 707 ஆண்களும் 489 பெண்களும் அடங்கலாக மொத்தமாக 1196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு முதற்காலாண்டில் 3 பேரும் இரண்டாம் காலாண்டில் 3 பேரும் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் முறையே 5,5 பேருமாக மொத்தம் 16 பேர் எயிட்ஸ் நோயினால் மரணமடைந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டில் முதலாம் இரண்டாம் மூன்றாம் காலாண்டுகளில் முறையே 6 ,4, 4 என மொத்தமாக 14 பேர் இறந்துள்ளனர்.
எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 216 என அறிக்கைகள் தெரிவிக்கின்ற அதேவேளை 2009ஆம் ஆண்டு 397374 பேர் எச் ஐ வி தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வவுனியா மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 1052 பேர் பரிசோதணைக்குட்படுத்தபட்ட நிலையில் ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டு இறந்துள்ளார்.இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு 555 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ள அதேவேளை நோய் தொற்றுள்ளவர்களாக இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.

கடந்த காலங்களில் இலங்கையில் வயது வந்தோர் பாதிக்கப்பட்டுள்ள வீதம் 0.1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது என்றாலும் அதிகரித்து வரும் நாகரீக வாழ்க்கை முறைக்கு ஏற்ப எயிட்ஸ் நோய்த்தாக்கமும் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களின் எல்லைகளையும் தொட்டுச்சென்றுள்ளது. இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிக்கப்பட்டும் , சுமார் 200 பேர் வரை மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பொதுவான கொள்கைத் திட்டமொன்று இல்லாத போதிலும் இலங்கையில் 2002-2006 காலப்பகுதியில் எச்.ஐ.வி க்கான தந்திரோபாயத் திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. எச்.ஐ.வி தந்தரோபாயத் திட்டம் தடுப்புமுறை, நலன்பேணல், நோயாளர்களை அடையாளம் காணுதல போன்ற 3 தொழில் நுட்பப்பிரிவுகளை கொண்டு செயற்பட்டு வந்துள்ளதுடன் சுகாதார அமைச்சு காலத்தின் தேவைக்கேற்ப சுமார் 3 வருடங்களுக்கொரு முறை தனது தந்திரோபாயத் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்று உள்ள சுமார் 89உறுப்பினர்கள் இணைந்து லங்கா பிளஸ் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதுடன். அவ்அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடல் , உளவியல் செயற்பாடுகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகிலாவிய ரீதியில் மிகஉருக்கமாக அனுஸ்டிக்கப்படும் எயிட்ஸ் தினம் . தேசம் கடந்து நாடு கடந்து சுமார் 33 மில்லியன் மக்களை ஆட்கொண்டுள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு புதிதாக 2.6 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில் 1.8 மில்லியன் மக்கள் இது வரை உயிரிழந்துள்ளனர்.
2004ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோயினால் உயிரிளந்தவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியன் ஆகும். இன்றைய கால கட்டங்களை பொருத்த வரை எயிட்ஸ் நோய் பரவும் வீதம் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்துள்ளது அல்லது அவற்றுக்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனலாம்.

கடந்த வருடங்களை விடவும் குறிப்பாக தென் ஆபிரிக்கா, சம்பியா, சிம்பாவே மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எயிட்ஸ் நோய் பரவும் எண்ணி;க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .  உலகளாவிய ரீதியில் எயிட்ஸ் நோயளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆய்வுகளும்
எயிட்ஸ் நோய் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்றதாய் ஆக்கும் மிக வேகமான நோய்க் கருவி என்பது அனைவரும் அறிந்ததே.
மிக நுண்மையான எச்.ஐ.வி வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையூம் வரை பெருகுவதில்லை. எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1982ஆம் ஆண்டு இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர்  இறந்துள்ளதுடன்   சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

உடலில் உள்ளபடர் ஜவ்வுப் படலமோ அல்லது இரத்தமோ, நோய் தொற்றிய இரத்தம், விந்து, யோனிமடற் கழிவு,முன்விந்துத்திரவம் அல்லது தாய்ப்பால் போன்ற உடல்திரவங்களோடு நேரடி தொடர்பு கொள்ளும்போது ஹெச்ஐவி வைரஸ் தொற்றுகிறது.

2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்.  330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது.
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆபிரிக்காவில் எச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டு வந்தாலும் இந்நோய் வெகு வேகமாக பரவும் தன்மைகொண்டதனால்; அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதே சாலச்சிறந்தது.

உலக பொப் இசை சங்கமத்தின் ஓராண்டு நினைவஞ்சலி

26 06 2010

எப்படி மரணம் அடைந்தார் என்ற பல உகங்களுக்கு மத்தியில் உலகப் புகழ் பெற்ற பொப் இசைப்பாடகர் மைக்கல் ஜக்சனின் ஓராண்டு நினைவஞ்லி அனுஸ்டிக்கப்படுகிறது.
பல நகரங்களில் அவரை நினைவு கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கல் ஜக்சன் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

மைக்கல் ஜக்சனை கௌரவிக்கும் வகையில் மெழுகுப் பொம்மைகள் அமைப்பதில் உலகப்புகழ் பெற்ற மேடம் தவுசட் அருங்காட்சியக அமைப்பு உலகம் முழுக்க 9 இடங்களில் மைக்கல் ஜக்சன் மெழுகுப் பொம்மைகளை வைத்துள்ளது. அந்த மெழுகு பொம்மை கண்காட்சியை பார்க்க மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த மெழுகு பொம்மை கண்காட்சி அடுத்த மாதம் (ஜூலை) 7 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மைக்கல் ஜக்சனின் சகோ தரி லடோயா தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மைக்கேல் ஜக்சன் இயற்கையாக மரணம் அடையவில்லை. அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், என் சகோதரர் உயிர் வாழ்வதை விட செத்தால்தான் நிறைய லாபம் கிடைக்கும் என்று ஒரு கூட்டம் நம்பியது. அவர்கள் தான் சதி செய்து மைக்கல் ஜக்சனை கொன்று விட்டனர். இதில் எனக்கு சந்தேகமே இல்லை என்றார்.

உலக பொப் இசைப்பாடகர் மைக்கல் ஜக்ஸம்ன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி திடீரென மரணம் அடைந்தார் , அவரது மரணத்தில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைவிடயத்தில் இலங்கை நிலவரம்

24 06 2010

This slideshow requires JavaScript.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநட்டின் போதே அமைச்சர் இந்தக்கருத்துக்களை தெரிவித்தார்.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகை நீடிப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரால் இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழு என்பவை தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதற்காகவே இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு கருத்துவெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர் கத்தரின் அஸ்டன் நான்கு நாட்களுக்கு முன்பாக தமக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தாகவும் அதில் ஆறுமாத காலத்திற்கு ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச்சலுகையை நீடிப்பதானால் இலங்கை அரசாங்கம் 15நிபந்தனைகளை இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ம்திகதிக்குள் பூர்த்திசெய்யுமென்ற எழுத்துமூல உறுதிமொழியை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இதுதொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் இந்த நிபந்தனைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டார் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் இதில் ஒருநிபந்தனையாகும் இது நாட்டின் உள்விவகாரத்துடன் தொடர்புடையது வெளிநாட்டு அரசாங்கம் இதுவிடயத்தில் தீhமானிக்க முடியாது.

இதற்கும் வர்த்தக உடன்படிக்கைக்கும் எவ்வித தொட்ர்பும் இருப்பதாக நாம் காணவில்லை இதனைத்தவிர 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர காலச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்பது மற்றுமொரு நிபந்தனையாகும் கடந்த மே மாதம் 05ம்திகதியன்ற அவசர காலச்சட்டத்தின் நூற்றுக்கு 70வீதமான விதிகளை அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களும் இன்றியே சுயமாக நீக்கியிருந்தது மக்களின் ஆணைபெற்ற அரசாங்கமே மக்களின் பாதுகாப்பு தொடர்புடைய விடயத்தில் தீர்மானம் மேற்கொள்ளமுடியும் இதனை விடுத்து வெளிச்சக்திகள் தீர்மானிக்க முடியாது.

இதேபோன்று பயங்கர வாத தடைச்சட்டத்தையும் முற்றாக நீக்க வேண்டும் என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும் இதனையும் ஏற்கமுடியாது இப்படியாக பதினைந்து நிபந்தனைகளும் நாட்டின் இறைமைக்கும் சுயாதீன ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடியவையாகும் இவற்றை நடைமுறைப்படுத்துவதானால் அரசியல் யாப்பை முற்றாக திருத்தியமைக்கவேண்டும் நாட்டிலுள்ள சட்டவரைபுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்களை இரத்துச்செய்யவேண்டி ஏற்படும் இப்படியாக நாட்டின் நலனிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் சுயகௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் நிபந்தனைகளுக்கு அடிபணியமுடியாது இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக்கையிருப்பு 6000மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகையினால் இலங்கைக்கு ஆக மொத்தாக கிடைக்க கூடியது 150மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இலங்கைக்கு ஆடைக்கோட்டா முறைமை அற்றுப்போனபோது ஆடைக்கைத்தொழிலுக்கு எதிர்காலம் இல்லை என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது ஆனாலும் படைப்பாற்றலில் தனித்துவமான எமது உற்பத்தியாளர்கள் தற்போது முன்னரைவிடவும் அதிலே சிறப்பாக செயற்படுகின்றனர்.

ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைபப்பாடு என்ன என ஊடகவியலாளர் வினவியபோது நாம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கர்க நியாயமான வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினோhம் இதற்காக இரு உயர்மட்டத்தூதுக்குழுக்களும் பிரசல்ஸ் அனுப்ப்ப்ட்டன ஆனால் நிபந்தனைகளின் அடிப்படையில் பேசமுடியாது ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சரின் கடிதத்திற்கு பதிலளிக்கபபோவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்